ஆஸ்திரேலிய இந்தியருக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் !

0
ஆஸ்திரேலியா வில் ட்ரிபிள்ஸ் அடித்த இந்தியருக்கு 66 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய இந்தியருக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் !
ஆஸ்திரேலியா வில் ட்ரிபிள்ஸ் அடித்த குற்றத்திற்காக, இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவருக்கு 66,000 ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா வின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. 

ஸ்கூட்டரில் தனது மனைவி மற்றும் பேரனை ஏற்றிக் கொண்டு, ட்ரிபிள்ஸ் அடித்த போது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி சிக்கி கொண்டார்.

பொதுவாக ஒரு சில பழக்க வழக்கங்கள் எப்போதுமே மாறாது என்பார்கள். இந்த இந்தியரின் விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகி விட்டது. 

இந்தியாவை பொறுத்த வரை டூவீலர்களில் ட்ரிபிள்ஸ் அடிப்பது என்பது குற்றமாக உள்ளது. ஆனால் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது.
குறிப்பாக கிராமப் புறங்களில் பலர் சர்வ சாதாரணமாக டூவீலர்களில் ட்ரிபிள்ஸ் அடித்து கொண்டுள்ளனர். 

டூவீலர்களில் மூன்று பெரியவர்கள் பயணிக்கும் நிகழ்வை கிராமப் புறங்களில் உங்களால் அடிக்க காண முடியும். 

இது இந்தியாவின் சட்டத்திற்கு எதிரானது என்றாலும், வாகன ஓட்டிகள் பலர் ட்ரிபிள்ஸ் அடித்து கொண்டே தான் உள்ளனர். 

போலீசார் அவ்வளவாக சோதனை செய்யாததே இதற்கு காரணமாக உள்ளது. இதுவே நகரங்களை எடுத்து கொண்டால், அங்கு கதையே வேறு. 

நகரங்களை பொறுத்த வரை வேறு விதமான ட்ரிபிள்சுக்கு அனுமதி உண்டு என வாகன ஓட்டிகள் தாங்களாகவே கருதி கொள்கின்றனர். 

அதாவது டூவீலர்களில் இரண்டு பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை பயணிக்கலாம் என்பது வாகன ஓட்டிகளின் எண்ணம்.

இன்னும் சிலரோ 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் பயணிக்கலாம் எனவும், இதனை போலீசார் தடுக்க மாட்டார்கள் எனவும் கருதுகின்றனர். இது தான் இந்தியாவின் பாரம்பரியம் ! 
ஆஸ்திரேலிய இந்தியருக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் !
எனவே ஆஸ்திரேலியா வில் தற்போது அபராதம் விதிக்கப் பட்டுள்ள தம்பதியும், ஒரு குழந்தையை டூவீலரில் கூடுதலாக ஏற்றி செல்ல அங்கு அனுமதி உண்டு என ஒரு வேளை நினைத்திருக் கலாம்.

விதிமுறைகள் குறித்து தனக்கு தெரியாது என அந்த இந்தியர் தெரிவித்ததாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் கூறியுள்ளனர். 

இந்த பதிலை கேட்டு போலீசார் ஆடி போயிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை! 

ஆஸ்திரேலியா வில் அபராதம் விதிக்கப்பட்ட இந்தியருக்கு 67 வயது ஆகிறது. அவரது மனைவின் வயது 59. அவர்களின் பேரனுக்கு 6 வயது மட்டுமே ஆகிறது.
ஆக இந்திய தர நிலைகளின்படி அவர் பெரிதாக தவறு செய்ய வில்லை. டூவீலரில் மூன்று பேர் பயணிப்பது இந்தியாவில் சட்ட விரோதம் தான். 

என்றாலும் 2 பெரியர்கள், 1 சிறுவர் பயணம் செய்தால், பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இதற்கு அனுமதியும் கிடையாது. ஏற்றுக் கொள்ளவும் படாது. 
ஸ்கூட்டரில் 3 பேர் பயணிப்பது குறித்து போலீசாருக்கு மற்ற வாகன ஓட்டிகள் சிலர் புகார் அளித்துள்ளனர். 

இதன் பேரில் போலீசார் உடனடியாக செயல்பட்டு இந்தியரை மடக்கி யுள்ளனர். இதன் பின் அவர் மது அருந்தி யுள்ளாரா? எனவும் போலீசார் சோதனை செய்தனர். நல்ல வேளையாக அவர் அந்த தவறை செய்ய வில்லை.

இல்லா விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகி யிருக்கும். இதன்பின் அந்த இந்தியருக்கு மூன்று பிரிவுகளின் கீழும், அவரின் மனைவிக்கு ஒரு பிரிவின் கீழும் போலீசார் அபராதம் விதித்தனர். 

ஹெல்மெட் அணியாத நபர்களை டூவீலரில் ஏற்றி சென்றதற் காக அவருக்கு இந்திய மதிப்பில் 16,510 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 

அத்துடன் இந்த குற்றத்திற்காக அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப் பட்டன. 
ஆஸ்திரேலிய இந்தியருக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் !
இது தவிர 8 வயதுக்குட்பட்ட சிறுவனை பாதுகாப்பற்ற முறையில், இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதற்காக 

அவருக்கு இந்திய மதிப்பில் 16,510 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டதுடன், 3 தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப் பட்டன.

மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணி களுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததற் காக அவருக்கு 16,510 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. இதற்காகவும் அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டன. 

அதேசமயம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த குற்றத்திற் காக அவரது மனைவிக்கு 16,510 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.
ஆனால் அவருக்கு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட வில்லை. அந்த தம்பதியின் வசம் 2 ஹெல்மெட்கள் இருந்தது புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது. 
இதில் ஒரு ஹெல்மெட்டை வாகனத்தை ஓட்டிய நபர் அணிந்திருந்தார். அவரது மனைவி ஹெல்மெட் அணிய வில்லை. மற்றொரு ஹெல்மெட் அவர்களது பேரனுடைய தலையில் இருந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings