பருவநிலை மாற்றம், வன அழிப்பு ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கால்பந்து மைதானத்தை காடாக மாற்றி யுள்ளனர் ஆஸ்திரி யாவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.
ஆரவாரம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட ங்கள் நிறைந்தது கால்பந்து மைதானங்கள்...
ஆனால், அடர் வனாந்திரத்தின் பசுமை, காற்றைக் கிழித்து அசைந்தாடும் இலைகள், கீச்சிடும் பறவைகளின் சத்தமுமாய் காட்சி அளிக்கிறது ஆஸ்திரியாவின் வூர் தெர்சி கால்பந்து மைதானம்.
பருவநிலை மாற்றம் மற்றும் காடுகள் அழிக்கப் படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில்
சுவிட்சர்லாந்து கலைஞரான கிளாஸ் லிட்மேன் என்பவர் தான் Klagenfurt நகரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தை இப்படி மாற்றி அமைத்து அசத்தியிருக்கிறார்.
தெற்கு ஆஸ்திரிய மாநிலமான கரிந்தியாவில் ஏரிக்கு அருகே சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில்
அமைந்துள்ள பிரமாண்டமான கால்பந்து மைதானம் இப்போது சுமார் 300 மரங்களால் நிரம்பி வழிகிறது.
புல் தரையாக இருந்த கால்பந்து மைதானத்தின் மையத்தில் மரங்கள் நடப்பட்டு தற்போது வனமாகக் காட்சி யளிக்கிறது.
30 ஆண்டு களுக்கு முன்பு ஆஸ்திரி யாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான மேக்ஸ் பீன்ட்னெர் என்பவர் வரைந்த டிஸ்டோபியன் வரைபடத்தை மாடலாக வைத்து இந்த காடு கட்டமைக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விலங்குகள் அழிந்து கொண்டு வருவதால், அவற்றை மிருகக்காட்சி சாலைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது.
இதை போல இனி எதிர் காலத்தில் மரங்களையும் கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்ற சூழல் உருவாகலாம் என்று
எச்சரித்து வன அழிப்பால் ஏற்படும் ஆபத்துக்களை தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். \
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே கால்பந்து மைதானத்தை காடாக மாற்றும் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டதாக சொல்கின்றனர் இந்த வனத்தை உருவாக்கிய வல்லுனர்கள்
சமீபத்தில் ஒட்டு மொத்த உலகையுமே திரும்பிப்பார்க்க வைத்த ஓர் நிகழ்வு அமேசான் அழிப்பு...
ஒரு நிமிடத்திற்கு 3 கால்பந்து மைதானம் அளவுக்கு உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடுகள் அழிக்கப் பட்டதைக் கண்ட ஒட்டு மொத்த உலகமுமே அதிர்ந்து போனது.
இந்த தருணத்தில் ஆஸ்திரியாவில் காடாக மாறியுள்ள கால்பந்து மைதானம் நிச்சயம் காடுகளின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Thanks for Your Comments