மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !

கொசுக்க ளால் மக்களு க்குப் பரவும் நோய்கள் ஆறு. மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல். இவற்றில் அதிகம் பேருக்கு ஆபத்தைத் தருவது மலேரியா காய்ச்சல்.
மலேரியா




உலக நாடுகளில் வருடந்தோறும் 30 கோடிப் பேருக்குப் புதிதாக மலேரியா ஏற்படுகிறது. ஆப்பிரிக்கா வில் மட்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு குழந்தை மலேரியாவால் இறந்து போகிறது. 

இந்தியாவில் சுமார் 18 கோடிப் பேருக்கு மலேரியா உள்ளது. 30 லட்சம் பேர் ஆண்டு தோறும் புதிதாக இந்த நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.

கொசுக்களில் 35 ஆயிரம் இனங்கள் உள்ளதாக கண்டுபிடித் துள்ளனர். அவற்றுள் அனா ஃபிலிஸ், குயூலெக்ஸ், ஏடஸ், மேன்சோனியா எனும் நான்கு வகைகள் மட்டுமே மனித இனத்துக்கு எமன்கள்.
இறால் குடமிளகாய் வறுவல் செய்முறை !
இவற்றிலும் ஆண் கொசுக்கள் மிகவும் சாதுவானவை. பெண் கொசுக்கள் தான் ஆபத்தானவை. நமக்கு மலேரியாவைப் பரப்புவதும் பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மட்டுமே.

‘பிளாஸ்மோடியம்’ என்னும் புரோட்டோசோவா கிருமிகள் தான் மலேரியாவு க்கு மூல காரணம். இவை பெண் அனாஃபிலிஸ் கொசுக்க ளிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள் இரவில் தான் நம்மைக் கடிக்கும். 

அப்போது கொசுக்களின் உமிழ் நீர் வழியாக மலேரியாக் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து விடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும்.
மலேரியா கிருமி
இக்கிருமிகள் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி கோடிக் கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்திற்கு வந்து ரத்தச் சிவப்பணுக் களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

இந்தக் காய்ச்சலில் 3 கட்டங்கள் உண்டு. முதல் கட்டத்தில் நோயாளிக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, களைப்பு உண்டாகும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சல் ஏற்படும்.
இறால் தயிர் பிரியாணி செய்முறை !
இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகி உடல் அனலாய்க் கொதிக்கும். மூன்றாம் கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும் உடல் ஐஸ் போல் குளிர்ந்து விடும்.




பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ மீண்டும் அதே நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி வந்து தொல்லை கொடுக்கும்.

மலேரியாவுக்கு ஆரம்பத்தி லேயே சிகிச்சை பெறத் தவறினால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்த சோகை ஏற்படுவது உறுதி. இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும்.

நோய் எதிர்ப்பாற்றல் குறையும். சிலருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிருக்கு ஆபத்து நேரும். இன்னும் சிலருக்கு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர்க் காய்ச்சல்’ (Black Water Fever) வரும்.

இந்த நோயின் போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
மீன் புட்டு செய்முறை !
மலேரியாவைக் குணப்படுத்து வதற்கு குளோரோ குயின், மெஃப்ளா குயின், பிரிமாகுயின், ஆர்ட்டிமீத்தர் எனப் பல மாத்திரை களும் ஊசிகளும் பயன்பாட்டில் உள்ளன,

குளோரோ குயின் மாத்திரையைச் சாப்பிடும் போது கடுமையான வாந்தி வரும். இதனால் பல நோயாளிகள் இந்த மாத்திரையை சரியான அளவுக்கு எடுத்துக் கொள்வ தில்லை. அரை குறையாகவே சிகிச்சை பெறுகின்றனர்.
மலேரியாவுக்கு சிகிச்சை
அப்படியே இந்த மாத்திரையை சரியான அளவில் தொடர்ந்து 3 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலும், அதன் பிறகு பிரிமாகுயின் மாத்திரை யையும் ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.

அப்போது தான் மலேரியா மீண்டும் ஏற்படாது. இதையும் பலபேர் முறைப்படி சாப்பிடுவ தில்லை.




இது போன்ற பல காரணங்க ளால் இந்த மாத்திரை களையே எதிர்த்துப் போராடுகின்ற அளவுக்கு இப்போது மலேரியா கிருமிகளுக்கு ஆற்றல் வந்து விட்டது.
தும்பிலி மீன் குழம்பு செய்முறை !
இதனால் மலேரியாவை பூரணமாக குணப் படுத்துவது என்பது மருத்துவ உலகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது.

இப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் மெம்பிஸ் நகரத்தில் உள்ள செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை ஆராய்ச்சி யாளர்கள் மலேரியாவைக் குணப் படுத்தும் புதியதொரு மாத்திரையைக் கண்டு பிடித்திருக்கி றார்கள்.

இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பேராசிரியர் கிப்ளின் கை (Kiplin Guy) இந்தப் புதிய மருந்து குறித்துப் பேசும் போது, ‘‘மலேரியாவை ஏற்படுத்தும் கிருமிகளில் பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம், ஓவேல், மலேரியே, வைவாக்ஸ் என்று நான்கு இனங்கள் உள்ளன.
மலேரியாவை குணப்படுத்த

இவற்றில் பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம் கிருமிதான் மிகவும் ஆபத்தானது. மலேரியாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த வர்களில் பெரும் பாலோர் இந்தக் கிருமியால் நோய் வந்தவர்கள் தான். 

ஆகவே இந்தக் கிருமிகளை ஒழிக்கின்ற வகையில் மருந்து தயாரிக்க முற்பட்டோம். ஆயிரக் கணக்கான மருந்து மூலக்கூறு களை ஆராய்ச்சியில் பயன் படுத்தினோம். 
மான் வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக்
இறுதியில் (+)SJ733 எனும் வேதியியல் மூலக்கூறு, ஃபால்சிபேரம் கிருமிகளை முற்றிலும் ஒழித்து விடுவதைக் கண்டறிந்தோம். சுண்டெலி களிடம் இதைப் பரிசோதித்துப் பார்த்தோம்.

இதன் முடிவுகள் சரியாகவும் மனதுக்கு நிறைவாகவும் வந்துள்ளன. இனி மலேரியா ஏற்பட்டுள்ள மனிதர்களிட மும் இதைப் பரிசோதித்துப் பார்க்க உள்ளோம்.

அதன் பிறகு இந்த மூலக்கூறு க்குப் புதிய பெயரைச் சூட்டி மருந்துச் சந்தைக்குக் கொண்டு வருவோம்’’ என்றார்.

இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது?

‘‘மலேரியா கிருமிகள் நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் வசிக்கின்றன. கிருமி வளர்வதற்கு அதன் உடலில் சோடியம் அளவு சரியாக இருக்க வேண்டும். அதற்கு ATP4 புரதம் தேவை.
மருந்து எப்படி வேலை செய்கிறது?




இந்த மருந்து ரத்தத்தில் கலந்து, சிவப்பணுவு க்குள் நுழைந்து கிருமியின் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள ATP4 புரதத்தை அழித்து விடும். இதன் பலனால் கிருமிக்கு சோடியத்தின் சமநிலை மாறி விடும்.
‘முலை வரிச்சட்டம்’ பற்றி தெரியுமா? 
சோடி யத்தின் அளவு அதிகமாகிவிட்டால் கிருமி இறந்து போகும். மலேரியாவு க்குத் தரப்படும் மற்ற மருந்துகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகமாக இது வேலை செய்கிறது.

மற்ற மலேரியா மருந்துகள், கிருமிகள் இல்லாத சிவப்பணுக் களையும் அழித்து விடும் தன்மை கொண்டவை. இதனால் நோயாளிக்கு ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
மீன் மிளகாய் மாசாலா செய்முறை !
ஆனால் (+)SJ733 மருந்தானது கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிவப்பணுக் களை மட்டுமே தேர்வு செய்து அழிக்கக் கூடியது. எனவே மலேரியாவுக்கு எதிரான பனிப்போருக்குப் பயன்படுத்த இது ஒரு சரியான ஆயுதம்’’ என்கிறார் கிப்ளின் கை.
Tags:
Privacy and cookie settings