மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

1 minute read
0
சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் மரண மடைந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு




சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சோந்த செந்தில், வனிதா தம்பதியின் மூத்த மகன் தீனா (14). எம்.ஜி.ஆா்.நகா் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
தீனாவின் தந்தை செந்தில் ஷோ ஆட்டோ ஓட்டி வருகிறார். முகலி வாக்கத்தில் மாநகராட்சி சார்பில் தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாத நிலையில், பள்ளங்கள் தற்காலிக மாக மணல் நிரப்பி மூடப் பட்டிருந்தன.

இந்நிலையில், மழை பெய்ததால் மணல் சரிந்து புதைந்து கிடந்த மின் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. மழை நீரும் அங்கு தேங்கி இருந்தது. 

அவ்வழியாக ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்து சென்ற தீனா வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இது குறித்து தீனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் செந்தில், உதவி மண்டலப் பொறியாளா் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனா். 




தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணை யருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்னுற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 

அதில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் இருப்பது மனித உரிமை மீறல் இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்ப பட்ட துடன், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 26, March 2025
Privacy and cookie settings