உணவு உட்கொள்ளும் போது, அது காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எந்த தருண உணவாக இருந்தாலும் உணவில் மட்டும் கவனம் செலுத்தி உட்கொள்ளாமல்,
டிவி பார்த்துக் கொண்டு, கைபேசியை பார்த்துக் கொண்டு, மற்றவருடன் உரையாடிக் கொண்டு, அல்லது நண்பர்க ளுடன் அரட்டை அடித்துக் கொண்டு தான் உணவை உட்கொள்கிறார்கள்.
இதனால் நாம் உணவு உட்கொள்ளும் போது பயன்படுத்த வேண்டிய பற்களை முழுமையாக பயன் படுத்தாமல் உணவை இரைப்பைக்கு அனுப்புகிறோம்.
இதன் காரணமாகத் தான் பெப்டிக் அல்சர் என்ற குடல்புண் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார் கள்.
இதன் காரணமாகத் தான் பெப்டிக் அல்சர் என்ற குடல்புண் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார் கள்.
எம்முடைய வாய் பகுதியில் அமைந்தி ருக்கும் பற்கள் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து கூழாக்கி, இரைப்பைக்கு அனுப்பும் பணியை செய்கிறது. இதற்காகத் தான் பற்கள் அமைந்திருக் கிறது.
எம்முடைய உடலில் உணவை அரைக்கும் ஒரே கருவி பற்கள் தான். பற்களால் அரைக்கப் படாத உணவுகள் இரைப்பை யிலும், குடலிலும் அரைக்கப் படுவதில்லை.
இன்னும் நுட்பமாக விவரிக்க வேண்டு மென்றால் நீங்கள் ஒரு முறை உட்கொள்ளும் திட உணவை பற்களால் முப்பதிற்கும் மேற்பட்ட முறையில் நன்றாக மென்று அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகே அதனை உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்ப வேண்டும். வைத்தியர்கள் குறைந்த பட்சம் பதினைந்து முறையாவது நீங்கள் உட்கொள்ளும் திட உணவைப் பற்களால் அரைத்து குடலுக்கு அனுப்புங்கள் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
ஆனால் நாம் ஐந்து முறைக்கும் கீழாகத் தான் பற்களை பயன்படுத்தி, உணவை முழுவதாக அரைப்படாத நிலையில் தான் தள்ளி விடுகிறோம்.
அங்குள்ள இரசாயனங்கள், நொதிகள் உணவு பொருட்களை சிதைவுற செய்யுமே தவிர, அரைப்ப தில்லை. இதன் காரணமாக உணவு முழுமையாக சக்தி ஆற்றலாக மாற்றபடுவ தில்லை.
அத்துடன் உடல், உணவையே அந்நிய பொருளாகக் கருதி, மலவாயில் வழியாக வெளியேற்று கிறது. அத்துடன் பெப்டிக் அல்சர் என்ற வயிற்றுப் புண்ணையும் உண்டாக்கு வதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதனால் நீங்கள் உங்களுடைய உணவை உண்ணும் போது நன்றாக மென்று பற்களுக்கு முழுமையான பணியை கொடுத்து, அரைத்து கூழாக்கி உணவுக் குழாய் வழியாக இரைப் பைக்குள் அனுப்பினால் வயிற்றுப்புண் குணமாகும்.
மலச்சிக்கல் என்ற பிரச்சினை ஏற்படாது. அத்துடன் நீங்கள் உட்கொள்ளும் உணவு எளிதாக இரைப்பையில் செரிமானம் செய்யப்பட்டு,
அதன் சத்துகள் உறிஞ்சப் படுவதால் ஆரோக்கியம் மேம்படு வதுடன், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.