மரத்து போதல் ஒரு நோயா !

0
‘நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதும் கால்களை தொங்க விட்ட நிலையில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போவதை உணர்வோம். 
மரத்து போதல் ஒரு நோயா



தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தால் மட்டுமல்ல... வேறு பல காரணங்க ளாலும் மரத்துப்போதல் பிரச்னை வரலாம்’’ என்கிறார் நரம்பியல் மருத்துவர் அருள் செல்வம்.

‘ரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் கை, கால்கள் மரத்துப் போகும். குறிப்பாக, ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சர் மாத்திரைக ளாலும் கை, கால்கள் மரத்துப் போகும். 
உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால், மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்ற வற்றில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். 

இரு பக்கமும் உடல் மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம். பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்னை இருந்தால், அதற்கு மரபணுக் கோளாறு காரணமாக இருக்கலாம்.
உடல் உறுப்புகள்
கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி மரத்துப்போய் அவதிப் படுகிறவர்கள் ஒரே இடத்தில், ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 

உடல் உறுப்புகள் மரத்துப் போவதென்பது நோய் கிடையாது. ஆனால், நீரிழிவு, தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பலவித நோய்களுக் கான அறிகுறியாக இருக்கலாம். 



ஒருவருக்கு கை, கால்கள் மரத்துப் போவதற்கான காரணங் களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
தைராய்டு ஹார்மோன் குறை பாட்டால் மரத்துப்போதல் ஏற்படலாம். அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக வும் மரத்துப் போதல் உண்டாகலாம். 
கல்லீரலில் பாதிப்பு
ஆரம்ப நிலையிலேயே கண்டுபி டித்து, சரியான சிகிச்சைகள் அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம். 

வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிப்பு அடைந்து காணப்பட்டால், உடல் உறுப்புகள் மரத்துப் போவதை குணப்படுத்த முடியாது... கட்டுப் படுத்த முடியும்.
தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்களு க்கும் கை, கால்கள் மரத்துப்போகும். கொதிக்கும் சுடு தண்ணீரை இவர்கள் மீது ஊற்றினாலும் கூட தெரியாது. 

இவர்களுடைய சருமத்தை முதலில் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றவாறு சிகிச்சை கொடுக்க வேண்டும். இதற்கு காலவரையறை கிடையாது. நீரிழிவுக் காரர்களும் கை, கால்கள் மரத்துப் போகாமல் இருக்க, ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வர வேண்டும். 



இவர்களுக்கு காலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், அதன் பாதிப்பு எலும்பு வரை பரவும். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை மற்றும் கால்கள் மரத்துப் போனால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகும். 

கை, கால்கள் மரத்துப் போவதை குணப்படுத்து வதற்கு தனியே உடற் பயிற்சிகள் எதுவும் கிடையாது.
மதுப்பழக்கத் துக்கு அடிமை யானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை கொடுக்கும் விதமாக, பாத்திரங் களை சுத்தம் செய்பவர்கள், டர்னர், ஃபிட்டர் போன்ற தொழில் செய்பவர் களுக்கும் அதிக எடை கொண்டவர் களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். 

பச்சிளம் குழந்தை, சிறுவர், சிறுமியரு க்கும் மரபணு காரணமாக இந்த நரம்புக் கோளாறு வரலாம். இதில் 15 விதமான கோளாறுகள் இருக்கின்றன. இந்த நரம்புக் கோளாறு களுக்கு சிகிச்சை கிடையாது. 
பையாப்சி செய்ய வேண்டும்



காலில் இருந்து நரம்பை எடுத்து பையாப்சி செய்து அதனை உறுதி செய்ய வேண்டும். இவர்களுக்கு உணர்ச்சி தெரியாது. புண் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டிக் பிரச்னையும் வரலாம்.

எதிர் பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போவது பக்க வாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

கை, கால் மரத்துப் போகும் பிரச்னை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும். 

மருத்துவரை ஆலோசித்து வைட்டமின் பி12 மாத்திரைகள் சாப்பிட வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அருள் செல்வம்.

மதுப்பழக்கத் துக்கு அடிமை யானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை கொடுக்கும் விதமான வேலை செய்பவர் களுக்கும் அதிக எடை கொண்டவர் களுக்கும் கை, கால்கள் மரத்துப் போகும் வாய்ப்புகள் அதிகம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings