நைஜீரியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தால் கைது செய்யப் பட்டுள்ள குழந்தைகளை ராணுவம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குழந்தைகள் பலரையும் ராணுவத்தார் கைது செய்துள்ளனர்.
இந்தக் குழந்தை களை மனிதத் தன்மையே இல்லாமல் நைஜீரிய ராணுவத்தார் கொடுமை செய்வதாக வும் அவர்களைத் தேவையற்ற துன்பங் களைச் சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதை எதிர்த்த அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை பார்வை என்னும் மையம் நைஜீரிய ராணுவத் துக்கு வேண்டுகோளும் வைத்துள்ளது.
வெளி உலகின் சுவடு கூட அறியாமல் பல ஆயிரம் குழந்தைகள் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் எந்தவொரு குற்றமும் சுமத்தப் படாமல் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
குழந்தைகள் சிறையில் இருப்பதற் கான எந்த வொரு காரணமும் சொல்லப் படவில்லை. போகோ ஹராம் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற் கான ஆதாரமும் இல்லை என்கிறது மனித உரிமை மையம்.
ஐநா அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2013 முதல் 2019 ஜனவரி வரையில் சுமார் 3,600 குழந்தைகள் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பாதி பேர் பெண் குழந்தைகள் என்றும் ஐநா குறிப்பிடுகிறது.
உள்ளூர் முதல் சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் வரையில் பல தரப்பிலி ருந்தும் சிறையில் உள்ள குழந்தை களுக்கு ஆதரவாக பலரும் முன் வருகின்றனர்.
உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?ஆனால், இது வரையில் நைஜீரியா ராணுவம் இது தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்க வில்லை.
Thanks for Your Comments