காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களும், அந்தத் தொகுதி களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரும் மனுக்களை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி முதல்வராக இருந்தார். அவருடைய அரசுக்கு, காங்., ஆதரவு அளித்து வந்தது.
இந்த அரசு மீது அதிருப்தியுற்ற, காங்., மற்றும் ம.ஜ.த., கட்சிகளைச் சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவிகளை, இந்தாண்டு ஜூலையில் ராஜினாமா செய்தனர்.
ஆனால், அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார், ராஜினாமா கடிதங்களை ஏற்க வில்லை. மாறாக, எம்.எல்.ஏ., க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தர விட்டு, தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, பெரும்பான்மை பலம் இல்லாததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது.தகுதி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்து, இந்த, 17 பேரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் காலியாக உள்ள, 17 சட்டசபை தொகுதிகளில், 15 தொகுதி களுக்கு, அக்., 21ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு ராஜராஜேஷ்வரி நகர் மற்றும் ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் படவில்லை.
இந்நிலையில், 'இடைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என, 17 எம்.எல்.ஏ.,க்களும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 பேரின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியதாவது:
இவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட, அப்போதைய சபாநாயகர், ரமேஷ் குமார், 'இந்த சட்ட சபையின் பதவிக்காலம் முடியும் வரையில், இவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது' எனக் கூறியுள்ளார்.
இந்த சட்ட சபையின் பதவிக்காலம், 2023 வரை உள்ளது. அதனால், இந்த உத்தரவு நியாய மற்றது. இடைத் தேர்தலில் போட்டி யிடுவதற்கு, இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் ஆணையர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவால், இவர்கள் இடைத் தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்க முடியாது.
இடைத் தேர்தலில் இவர்கள் போட்டியிடலாம். இந்த வழக்கால், கர்நாடகாவில், 15 தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கு எந்த தடையையும் விதிக்கக் கூடாது.
இவ்வாறு, மனுவில் கூறப்பட் டுள்ளது.இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட, நீதிபதி, என்.வி.ரமணா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு, நாளை இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
Thanks for Your Comments