சுந்தரி அக்கா கடைக்கு கிடைத்த அரசு அங்கீகாரம் !

0
சென்னை மெரினா கடற்கரையில் தள்ளு வண்டி கடை வைத்திருக்கும் சுந்தரி என்பவரின் கடைக்கு உணவுத் தரச் சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கிறது.
அரசு அங்கீகாரம்



சென்னை மெரினா உழைப்பாளர்கள் சிலை மற்றும் நீச்சல் குளத்திற்கு இடையே தள்ளு வண்டி உணவுக் கடை வைத்திருப்பவர் சுந்தரி. இவரது கடையை வாடிக்கை யாளர்கள் அனைவரும் ‘சுந்தரி அக்கா’ கடை என அழைப்பார்கள். 

இவரது கடை தொடர்பாக பல செய்திகள் வெளியாகி யிருக்கின்றன. இதனால் இந்தக் கடை பிரபலமான கடையாக திகழ்கிறது. மீன், மட்டன், ஈரால் என வகை வகையான அசைவ உணவுகள் இவரது கடையில் கிடைக்கும். 
குறைந்த விலை என்பதால் மதிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் கூட்டம் கடையில் அதிகரித்து காணப்படும்.

இந்த கடைக்கு வாடிக்கை யாளர்கள் கொடுத்த அங்கீகாரத் துடன் தற்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் அரசால் கிடைத் திருக்கிறது. 

தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் இருந்தும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத் திடம் இருந்தும் இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கிறது. 



அதில், மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சுந்தரியை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
தனது கடைக்கு கிடைத்திருக்கும் சான்றிதழை தனது வாடிக்கை யாளர்களுக்கு சமர்பிப்பதாக அவர் தெரிவித்தி  ருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings