பாடல் கேட்டதால் லைசென்ஸ் பறிமுதல் - பைக்கின் உரிமையாளர் !

0
பாடல் கேட்டதற் காக விலை யுயர்ந்த பைக்கின் உரிமை யாளருடைய லைசென்ஸைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த முழுமை யான தகவலை இந்த பதிவில் காணலாம்.
பாடல் கேட்டதால் லைசென்ஸ் பறிமுதல்
புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காணப்படு கின்றது. 

இதற்கு அண்மைக் காலங்களாக சமூக வலைதளம் மற்றும் செய்தி என திரும்பி பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காணப்படும் அதிகபட்ச அபராத தொகை குறித்த தகவல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.
புதிய சட்டம் நடை முறைக்கு வந்ததில், குறிப்பிட்ட மாநில போலீஸார் தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர். 

நாட்டில் போக்குவரத்து விதி மீறல்களே இல்லாத சூழலை உருவாக்கும் விதமாக மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. 

இதனை உறுதிப் படுத்தும் வகையில் சில மாநிலங்களின் போலீஸார் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டியொருவர் பைக்கில் இசையைக் கேட்டதற் காக போலீஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி யுள்ளது.

இச்சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறி யுள்ளது. விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராகவ் ப்ருதி. இவர், விலை யுயர்ந்த சொகுசு ரக பைக்கான ஹார்லி டேவிட்சனின் ரோட்க்ளைட் பைக்கைப் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த பைக் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காணப்படு கின்றது. அந்த வகையில், சொகுசு கார்களில் இடம் பெறும் சில பிரிமியம் ரக வசதிகள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக் கின்றது. 
அதில் முக்கிய மானதாக, இசையை ஒலக்கின்ற வகையிலான ஸ்பீக்கர் இருக்கின்றது. இதுவே, ராகவைப் போலீஸார் மடக்கி செல்லாண் வழங்கு வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ராகவ் இந்த பைக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தான் வாங்கி யுள்ளார். எனவே இது கடந்த ஒரு மாத காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. 

இந்நிலையில், திலக் நகர் பகுதியில் அவர் சென்றுக் கொண்டிருந்த போது, போலீஸர் அவரை மடக்கி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ராகவின் ஓட்டுநர் உரிமைத்தைப் போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு, ஏன் என்னை மடக்கி ஓட்டுநர் உரிமத்தைக் கேட்கிறீர்கள் என்று போலீஸாரிடம் ராகவ் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த போலீஸார், பைக்கில் இருந்க ஸ்பீக்கர் மற்றும் சேடில் பேக்குகளை (saddlebags) கை காட்டி, அவற்றை ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களாக குறிப்பிட்டனர். 
இதற்காகவே தாங்கள் மடக்கியதாகவும் காரணம் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்து போன ராகவ், அது மாடிஃபை பொருட்கள் அல்ல என்றும், ஹார்லி நிறுவத்தின் பைக்கிலேயே பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்த வசதி என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்லி பைக்
ஆனால், போலீஸார் அதனை ஏற்கவில்லை. இருப்பினும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் விற்பனை யாகும் ஹார்லி டேவிட்சன் ரோட்க்ளைட் பைக்கின் வீடியோ ஆதாரத்தையும் காண்பித் துள்ளார். 

ஆனால், இவை யனைத்திற்கும் செவி சாய்க்காத திலக் நகர் போலீஸார், அதற்கான அபராத செல்லாணை வழங்கி யுள்ளனர்.

இதனால், விரக்தி யடைந்த ராகவ், இது குறித்து வெளியுலகிற்கு தெரியப் படுத்தும் வகையில், அவரது முகப்புத்தக பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.
இதை யடுத்து, அந்த இளைஞருக்கு திலக் நகர் போக்குவரத்து காவல் நிலைய அதிகாரியின் தொடர்பு எண் கிடைத்துள்ளது. ஆனால், ராகவின் அழைப்பிற்கு அவர் முறையாக பதிலளிக்க வில்லை என கூறப்படு கின்றது. 

இதற்கு முன்பாக பல முறை இ-மெயில் மற்றும் நேரடி வருகை என பல முயற்சிகளை மேற்கொண் டுள்ளார். அவை யனைத்திற்கும் பலனில்லை என்று கூறப்படு கின்றது.
போக்குவரத்து காவல்நிலையம்
ஹார்லி டேவிட்சனின் 2019 ரோட்க்ளைட் மாடல் பைக்கை அவர் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். இதற்காக அவர் ஆன்ரோடு விலையாக ரூ. 40 லட்சம் வரை செலுத்தி யுள்ளார். 

இந்த மோட்டார் சைக்கிளில், பூம் பாக்ஸ் ஜிடிஎஸ் இன்ஃபோ டெயின்மெண்ட் சிஸ்டம், 25 வாட் திறன் கொண்ட இரு ஸ்பீக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகள் இடம் பெற்றிருக் கின்றன.

இதுபோன்ற அம்சத்தை ஹார்லி டேவிட்சனின் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே பெற்றிருக் கின்றன. மேலும், இந்தியன் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் சிலவும் பெற்றுள்ளன.

ஆனால், மோட்டா ர்சைக்களில் இந்த சிறப்பம்சம் இடம் பெற்றிருக்கும் காரணத்திற் காக அபராதத்தை வழங்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும்.

இதில், ராகவுக்கு மோட்டார் வாகன சட்டம் 102 மற்றும் 177 ஆகிய பிரிவுகளின் கீழ் அபராத செல்லாண் வழங்கப் பட்டுள்ளது. 
செல்லாண் வழங்கியது மட்டு மில்லாமல் அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான அபராதமாக போலீஸார் ரூ. 500 விதித்துள்ளனர்.

அபராதம் சிறிதாக இருந்தாலும், ராகவை போலீஸார்கள் மிகவும் கீழ் தரம் தாழ்த்தி நடத்தியதாக கூறப்படு கின்றது. இது போன்ற ஒரு சில காரணங் களால் தற்போது தனது போராட்டத்தை சமூக வலை தளத்தில் அவர் தொடங்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings