விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை !

0
சென்னை மாநகராட்சி க்குட்பட்ட பகுதிகளில் பேனர் வைப்பதது தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை




அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளிலும் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.

எதிர் காலத்தில் பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பேனர் வைப்பதற்கு கீழ்காணும் நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும்.
1.ஒவ்வொரு விண்ணப்ப தாரரும் படிவம் 1-யை பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடை யின்மைச் சான்று, 

அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிட மாகவோ அரசு நிறுவனம் சார்ந்த கட்டிட மாகவோ இருந்தால் அவர்களிட மிருந்து அதற்கான தடையின்மைச் சான்று அமைக்கப்பட உள்ள இடத்துக்கான வரைபடம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.




2.ஒவ்வொரு அனுமதிக்கும் அனுமதி கட்டணம் 200 ரூபாய்க்கான வரைவோலை மற்றும் ஒவ்வொரு அனுமதிக்கும் காப்பீட்டுத் தொகை 50 ரூபாய்க் கான வரை வோலையை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி பெயரில் பெற்று சமர்பிக்க வேண்டும்.
3.விதிமுறை களை மீறி பேனர் வைத்தால் அவர்கள் மீது ஓராண்டு சிறையோ அல்லது 5 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டு சேர்த்தோ தண்டனை யாக விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings