தனியார் மகளிர் விடுதி நடத்தும் பெண்ணிடம், முன்னாள் எம்.பி.யின் கணவர் உல்லாச த்திற்கு ஒரு பெண்ணை அனுப்பும்படி கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பதா கவும் மகளிர் விடுதி உரிமையாளர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையத்தில் 12 ஆண்டுகளாக மகளிர் விடுதி நடத்தி வருபவர் நிர்மலா. இவர் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்திய பாமாவின் கணவர் வாசு மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
உல்லாசமாக இருக்க ஒரு பெண்ணை அனுப்பும்படி வாசு மிரட்டுவதாக குற்றம் சாட்டும் நிர்மலா, வாசு பேசியதாக ஒரு தொலைபேசி உரையா டலையும் வெளியிட் டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி.யின் கணவர் வாசு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல் துறையினர் அதனை வாங்க மறுப்பதா கவும் அவர் குற்றச் சாட்டை முன் வைத்துள்ளார்.
தனக்கும், தனது விடுதிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பலர் செயல் படுவதாக கூறும் நிர்மலா, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.
இதனிடையே கோபி செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இல்லாத காரணத்தினால் தான் புகார் வாங்க வில்லை என காவல்துறை தரப்பில் விளக்க மளிக்கப் படுகிறது.
நிர்மலா முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் பெற முன்னாள் எம்.பி.யின் கணவர் வாசுவை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப் பட்டிருந்தது,
Thanks for Your Comments