கர்நாடகாவின் கலபுரகி பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வில்லை என்றால் பெட்ரோல் தரக்கூடாது என்ற புதிய விதியை காவல்துறை அமல்படுத்த உள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமல் படுத்தப் பட்டதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படுவதுடன்
வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுக்க காவலர்கள் பலவிதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வில்லை என்றால் அவர்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர் களுக்கு காவல்துறை அறிவுறுத்தி யுள்ளது.
இந்த புதிய விதி, வருகிற 29ம் தேதி முதல் அங்கு அமல் படுத்தப்படும் எனவும் அதுவரை ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நடத்தப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பாட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதியை அமல் படுத்துவதற்கு பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Thanks for Your Comments