இனி வாகனங்களை பரிசோதிக்க வேண்டாம் - போலீஸுக்கு உத்தரவு !

0
உயர்த்தப்பட்ட அபராதத் தொகை குறித்த விவாரம் வைரலானதை அடுத்து, வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு போலீஸ் டைரக்டர் ஜெனரல் உத்தர விட்டுள்ளார்.
வாகனங்களை பரிசோதிக்க வேண்டாம்



அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கு, போக்குவரத்து விதி மீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதில் காயமடை வோரின் எண்ணிக்கையை விட, இறப்போர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும், அந்த இழப்பைப் பெறும் குடம்பத்தி னருக்கு அது ஆராத வடுவாக மாறி விடுகின்றது.

எனவே, இதனைக் கட்டுபடுத்தும் விதமாக கடுமையான சட்டங்கள் பல இயற்றப் படுகின்றன. இருப்பினும் அவை பலனளிக்காத சூழலே நிலவுகின்றது.
ஆகையால், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஓர் அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளி யிட்டிருந்தது. அந்தவகையில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. 

இது, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இத்திட்டம், கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால், அந்தந்த மாநில போலீஸார் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, புதிதாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஹிரியானா மாநில போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஸ்கூட்டர் உரிமை யாளருக்கு ரூ. 23 ஆயிரத்திற் கான அபராதத்தை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏனென்றால், அதன் உரிமையாளர் "இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ. 16 ஆயிரம் தான். ஆனால், போலீஸார் எனக்கு கொடுத்துள்ள அபராதமோ ரூ. 23,000" என வேதனை தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம், பொது மக்கள் மத்தியில் மிகப் பெரிய களோபரத்தை ஏற்படுத்திய நிலையில், மிக வேகமாகவும் வைரலாகியது.



இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடாத வரை வாகன ஓட்டிகளை மடக்கி ஆய்வு செய்ய வேண்டாம் என ஹரியானா காவல் துறையினருக்கு, அம்மாநில போலீஸ் ஜெனரல் இயக்குநர் (டிஜிபி) உத்தர விட்டுள்ளார்.

இது குறித்து ஹிரியானா மாநிலத்தின் டிஜிபி கூறியதாவது, 

"ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், சிக்னலை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல் களை வாகன ஓட்டிகள் அரங்கேற்றம் செய்யாத வரை, அவர்களை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டாம்" என்றார்.

டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்குதான் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணை குருகிராம் போலீஸார் வழங்கி யிருந்தனர். அவ்வாறு, அவர் செய்த குற்றங்களாக போலீஸார் கூறியதை பின்வருமாறு பார்க்கலாம்...

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

பதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

காற்று மாசுபாட்டை மீறுதல்

தலைக்கவசம் இல்லாதது

என பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக கூறி போலீஸார் இத்தகைய பெருமளவி லான அபராத்தத்தை வித்திருந்தனர். இச்சம்பவம், பெரும் வைரலானதை அடுத்து அம்மாநில போலீஸாருக்கு டிஜிபி இந்த புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளார்.
ஹரியானா மாநில போலீஸார், புதிய உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதியின்படி இதுவரை 343 பேருக்கு செல்லாண்களை வழங்கி யிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ரூ. 52.32 லட்சம் வசூல் செய்யப் பட்டுள்ளது. இது புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் நான்கே நாட்களில் கிடைத்த தொகையின் விவரமாகும்.

போக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றங் களைத் தடுக்கும் விதமாக, கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி
மேலும், இதில் மரணத்திற்கு ரூ .5 லட்சம் இழப்பீடு மற்றும் மோட்டார் வாகன விபத்தில் கடுமையான காயத்திற் குள்ளாவர் களுக்கு ரூ .2.5 லட்சம் வழங்கவும் வழிவகைச் செய்யப் பட்டுள்ளது.



அதேசமயம், இந்த புதிய திட்டம் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் அதனை நடைமுறை க்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி யுள்ளன.

விதிமீறலில் ஈடுபடுவோரை தவிர்த்து, சாலைகளில் செல்லும் பிற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று ஹரியானா போலீஸ் அறிவுறுத்தி உள்ள நிலையில், முக்கிய ஆவணங் களை எடுத்து வருவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பெங்களூர் போலீசாரும் வெளியிட் டுள்ளனர்.

இனி போலீஸாரிடம் நகல் ஆவணங் களை காண்பிக்க வேண்டிய அவசிய மில்லை என காவல் துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளது.
பலர், வாகனத்திற் கான ஆவணத்தை நகல்களை வைத்திருப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். ஆகையால், பல நேரங்களில் ஆவணம் இருந்தும் சிக்கலில் சிக்குகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் விதமாக டிஜிலாக்கர் மற்றும் பாரிவாஹன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், இந்த ஆப் மூலம் காண்பிக்கப்படும் டிஜிட்டல் ஆவணங்களை, சில போலீஸார் ஏற்றுக் கொள்வதில்லை என கூறப்படு கின்றது. 

ஏன், தமிழகத்தில் கூட ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் இல்லை யென்று அபராதம் விதித்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.



இதனை உடைத்தெறியும் வகையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீஸார் டிஜி லாக்கர் மற்றும் பாரிவாஹன் ஸ்மார்ட்போன் செயலி மூலம் காண் பிக்கப்படும் ஆவணங்களை ஏற்றுக் கொள்ள இருப்பதாக தகவல் வெளி யிட்டுள்ளது.

அதில், "சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத் தலின்படி, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்று மற்றும் காப்பீட்டு சான்று உள்ளிட்ட வற்றின் டிஜிட்டல் ஆவணங்களை மாநில போலீஸார் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகையால், வாகன ஓட்டிகள் நகலுக்கு பதிலாக பாரிவாஹன் மற்றும் டிஜி லாக்கர் போன்ற வற்றில் சேகரிக்கப்பட்ட ஆவணங் களையும் காவல் துறையினர் கேட்கும் போது காண்பிக்கலாம்" என தெரிவித்துள்ளது.

பெங்களூரு போலீஸார் மேற்கொண்டி ருக்கும் இந்த நடவடிக்கை, மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி நடைமுறை க்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

டிஜிலாக்கர் என்பது இந்திய அரசாங்கத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் டிஜிட்டல் சேமிப்பு தளமாகும். இது ஆதார் எண்ணை மையமாகக் கொண்டு பயன்படுத்தப் படக்கூடிய ஓர் செயலியாகும்.
யார் இந்த யூதர்கள்? ஏன் இவர்களை பார்த்து பயப்பட வேண்டும்?
ஆகையால், இதன் மூலம் முறைகேடு செய்வது என்பது சற்று கடினம் என்று கூறப்படு கின்றது. இந்த செயலிமூலம் அரசு வழங்கும் அனைத்து ஆவணங் களையும் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். 

மேலும், தேவைப்படுகின்ற நேரத்தில் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இதேபோன்று, மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் செயலிதான் எம்பாரிவாஹன்.

இது, வாகனம் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் தளமாகும். ஆகையால், வாகனம் சார்ந்த ஆவணங் களை இதில் சேகரித்து வைப்பது மிக எளிதானது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings