மாம்பழம் திருடியவரை நாடு கடத்த உத்தரவு !

0
துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்தியாவை சேர்ந்த ஊழியருக்கு 
மாம்பழம் திருடியவரை நாடு கடத்த உத்தரவு !
ரூ. 96,600 அபராதம் விதித்ததோடு மட்டு மல்லாமல் அவரை நாடு கடத்துமாறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் டெர்மினல் 3-ல் இந்தியாவை சேர்ந்த 27 வயதான விமான நிலைய ஊழியர் பணி புரிந்துள்ளார். 

இவர், பயணிகளின் உடைமை களை விமானத்தில் இருந்து கன்டெய்னரில் ஏற்றுவது மற்றும் இறக்குவது தொடர்பான பணிபுரிகிறார். 
கடந்த 2017ம் ஆண்டு ஆக., 11ல் பயணிகளின் உடைமைகளில் இருந்து சுமார் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங் களை திருடி யுள்ளார். 

அவர் திருடும் நிகழ்வை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பாதுகாப்பு அதிகாரி பார்த்து புகார் தெரிவித்தார்.

இதற்காக 2018ல் கைது செய்யப்பட்ட அந்த ஊழியர், தண்ணீர் தாகம் அதிகமாக இருந்ததால் இந்தியாவிற்கு அனுப்பப்பட இருந்த 

பழங்கள் நிறைந்த பெட்டியில் இருந்து 2 மாம்பழங் களை எடுத்ததாக ஒப்புக் கொண்டார். 
மாம்பழம் திருடியவரை நாடு கடத்த உத்தரவு !
இதனை யடுத்து பயணிகளின் உடமைகளில் இருந்து இரண்டு மாம்பழங் களை திருடிய இந்திய ஊழியருக்கு, 5 ஆயிரம் திர்ஹாம் (இந்திய ரூபாய் மதிப்புப்படி ரூ. 96,600) அபராதம் விதித்ததோடு, 
அவரை நாடு கடத்த வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப் பட்டவர் மேல் முறையீடு செய்ய 15 நாள் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings