விக்ரம் லேண்டரை தேடிய பாகிஸ்தானியர்கள் !

0
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியாவைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தகவல் வெளியாகி யுள்ளது.
விக்ரம் லேண்டரை தேடிய பாகிஸ்தானியர்கள்




நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத் துடனான தொடர்பை இழந்தது. 

இதனால் மிகுந்த ஏமாற்ற மடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியாவைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கூகுளில் சந்திரயான் 2, இஸ்ரோ, விக்ரம் லேண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட் டுள்ளன. இந்தியர்களை போன்று பாகிஸ்தான் மக்களும் இந்த கீ வேர்ட்ஸ்களை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடி யுள்ளனர். 




கூகுள் வெளியிட்ட தகவல் அறிக்கையில், விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானி யர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டுள்ளது.

விக்ரம்லேண்டர் தொடர்பை இழந்ததும் #IndiaFails என்ற ஹேஸ்டேக்கை பாகிஸ்தானி யர்கள் ட்ரெண்ட் செய்தனர். 

அதற்கு பதிலடியாக #WorthlessPakistan என்ற ஹேஸ்டேக்கை இந்தியர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத் தக்கது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings