பிறந்த 20 நாளில் குழந்தைகளைக் கொன்ற பெற்றோர் !

0
பிறந்து 20 நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தை களை நீரில் மூழ்கடித்து பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பிறந்த குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்




உத்தரப் பிரதேச மாநிலம் பிக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வசீம், நசீமா தம்பதிகள். கூலித்தொழில் செய்து வரும் இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. 
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள காவல் துறையினரிடம் தனது இரண்டு குழந்தைக ளான ஆஃப்ரின் மற்றும் அஃபியா ஆகியோரை காலையில் விடிந்து எழுந்து பார்த்த போது காணவில்லை என்று வசீம் புகார் அளித்துள்ளார். 

புகாரை பதிவு செய்த காவல் துறையினர், வசீம் வீட்டின் அருகே தேடினர். 

அப்போது, அவரது வீட்டின் அருகே, இரண்டு குழந்தைகளும் இறந்து மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த காவல் துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் இறப்பு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை யில் இறங்க, இரண்டு குழந்தை களையும் கொன்றது அவர்களின் பெற்றோர்களே என்பது தெரிய வந்தது. 

அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் குழந்தைகளை வளர்க்க செலவு செய்வதற்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இருவரையும் குளத்தில் வீசி கொன்றது தெரிய வந்தது. 

இது குறித்து வசீம் மற்றும் அவரது மனைவி வசீமா இருவருக்கும் இடையில் நேற்று இரவு வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில், இன்று காலை குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.
“எங்களது வருமானம் மிகக்குறைவு, இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்கும்  அளவுக்கு எங்களது வருமானம் போதாது. 

எனவே தான் இருவரையும் கொல்ல முடிவு செய்தோம்” என்று பெற்றோர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.




மேலும் நடத்திய விசாரணை யில், வசீமுக்கு இரண்டுமே பெண் குழந்தைக ளாகப் பிறந்தது பிடிக்க வில்லை. இது குறித்து நசீமாவிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். 
பெண்குழந்தை பிறந்தது பிடிக்காமல் குழந்தை களை கொலை செய்திருக்க லாமோ என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 201 (சாட்சியங்களை மறைப்பது அல்லது குற்றத்தை மறைப்பதற் காக தவறான தகவல்களை கொடுப்பது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings