பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பள்ளிக்கூட கட்டடம் ஒன்று அடித்து செல்லப் பட்டது.
வட மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் கங்கை நதியின் நீர் அதிகமாக பாய்கிறது.
இந்தச் சூழலில் பீகார் மாநில கத்திஹார் பகுதியிலுள்ள பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கங்கை ஆற்றில் அதிகரித்து இருக்கும் வெள்ள நீரினால் இந்தப் பள்ளிக்கூடம் அடித்து செல்லப் பட்டது.
இந்தச் சம்பவத்தின் போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட வில்லை.
ஏனென்றால் இந்தச் சம்பவத்திற்கு முன்பு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை வகுப்புகளை ரத்து செய்து மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டது.
Thanks for Your Comments