பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்- மந்திரியாக அம்ரீந்தர் சிங் உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அரசு பள்ளி மாணவிகளு க்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் அமல் படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப் பட்டது.
இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக ளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல் படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவி களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப் பட்டுள்ளதாக வும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments