பீர் டின்னுக்குள் மாட்டிய நல்ல பாம்பு !

0
பீர் டின்னுக்குள் நல்ல பாம்பு ஒன்று தலையை விட்டு பீரை ருசி பார்த்தது. சிறிது நேரத்தில் போதை தலைக் கேறியதும் அதுவால் நகர முடியவில்லை. 
பீர் டின்னுக்குள் நல்ல பாம்பு



டின்னுக்குள் இருந்து தலையை எடுக்க முயற்சித்தும் முடியாததால் பொது மக்கள் மீட்டு காட்டில் கொண்டுபோய் விட்டனர். 

இந்தியாவில் இன்றைய கால கட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் எங்கு பார்த்தாலும் மலை போல் குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 

குறிப்பாக தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. கடைகளில் வைத்திருப்ப வர்களுக்கு அபராதமும் விதிக்கப் படுகிறது.
இத்தனை கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம் நின்ற பாடில்லை. நம்ம ஊர் வனப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது என்றால் நம்மவர்களுக்கு கொண்டாட்டம் தான். 

மது பாட்டிலுடன் பிளாஸ்டிக் கப்புகளுடன் அங்கு புறபட்பட்டு விடுவார்கள். அங்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். எல்லாம் முடிந்ததும் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பாட்டில் களை அங்கே வீசி சென்று விடுவார்கள். 

இப்படி அவர்கள் வீசி செல்லும் பாட்டில்கள், கப்புகள் வனப்பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குக ளுக்கும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.

இப்படி பிளாஸ்டிக் பொருட்கள் கண்ட இடங்களில் வீசுகிறார்களே என நாம் ஆதங்கப் படுவது உண்டு. இப்படி வீசி சென்ற பீர் டின்னுக்குள் பாம்பு ஒன்று வசமாக மாட்டிக் கொண்டது தான் சம்பவம். 

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜி அருகே பரிபடா வனப்பகுதியில் குடித்துவிட்டு சென்ற ஒரு கும்பல் மது பாட்டில்களையும், பீர் டின்னையும் அப்படியே வீசி சென்றனர். 



அந்த நேரம் பார்த்து நல்ல பாம்பு ஒன்று அங்கு வந்தது. வித்தியாச மான வாசனை வந்த இடம் நோக்கி நகர்ந்தது. அங்கு கிடந்த பீர்டின்னுக்குள் தலையை நுழைத்தது. பாட்டிலில் இருந்த மீதி பீரை ருசித்து குடித்தது.

பின்னர் கிரக்கத்துடன் பீர் டின்னுக்குள் இருந்து தலையை எடுக்க முயன்றது. ஆனால் முடிய வில்லை. டின்னுக்குள் இருந்து மீள அங்கும் இங்கும் வித்தை காட்டியது. ஆனால் தலை வெளியே வருவதாக இல்லை. 
அந்த நேரம் பார்த்து பொதுமக்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் பாம்பு படும்பாட்டை கண்டனர். அதை மீட்கும் முடிவில் அவர்கள் இறங்கினர். ஒரு வழியாக பாம்பை கடும் போராட்ட த்திற்கு பின் பீர்டின்னுக்குள் இருந்து மீட்டனர். 

பின்னர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு போய் விட்டனர். உடனே சர்ரென்று சென்ற அந்த பாம்பு அங்கிருந்த புற்றுக்குள் புகுந்து கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings