ராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அவ்வகையில், சிட்டோகர் மாவட்டத்தில் பெய்த பெரு மழையின் விளைவாக ஏரிகள், அணைக் கட்டுகள் ஆகிய வற்றில் கொள்ளளவை கடந்து தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள ராணா பிரதாப் அணையில் இருந்து உபரி மழைநீர் நேற்று திறந்து விடப்பட்டது.
அந்த உபரிநீர் முக்கிய சாலைகள் வழியாக பெரு வெள்ளமாக பாய்ந்தோடிய தால் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் என சுமார் 400 பேர் சாலையை கடந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் விடியவிடிய பள்ளிக்குள் சிக்கித் தவித்தனர்.
கிறுகிறுப்பு, தலைச் சுற்றல் ஏற்படுவது ஏன்?
அவர்கள் அனைவருக்கும் அந்த பள்ளி அமைந்திருக்கும் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றாக சேர்ந்து உணவு வகைகளை சமைத்து, பரிமாறினர்.
Thanks for Your Comments