மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சூழலில் இ-சிகரெட் என்றால் என்ன?
இ-சிகரெட் என்பது Electronic Nicotine delivery Systems (ENDS) வகையாகும். இந்தச் சிகரெட் புகையிலையை பயன்படுத்தாது.
இதற்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்து கிறது.
இதில் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். இந்த இ-சிகரெட் பல வடிவங்களில் இருக்கும்.
அனைத்தும் பேனாவை போன்று வடிவத்தில் சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த பேனா போல் உள்ள இ-சிகரெட்டில் பேட்டரி ஒன்று பொருத்தப் பட்டிருக்கும்.
இந்த இ-சிகரெட்டை வாயில் வைத்து ஒருவர் உள்ளே இழுக்கும் போது இதன் செயல்பாடு தொடங்கும்.
இ-சிகரெட்டிலுள்ள கரைசல் ஆவியாக மாறி புகை வெளிவரும். அப்போது அந்த நபர் நிக்கோடினை உள்ளே முகர்வார்.
இ-சிகரெட் அதிக வலுவாக இருக்கும் பட்சத்தில் நிக்கோட்டின் வேகமாக உடம்பிற்குள் செல்லும். அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.
இ-சிகரெட்டில் பல்வேறு சுவைகளில் வருகிறது. அதாவது சுவைக்கு ஏற்ப கரைசலில் வாசனை திரவியம் சேர்க்கப்படும்.
இ-சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிசிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன.
இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதால் இதனை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments