காரணமின்றி தும்மல், ஏப்பம், விக்கல் வருவது ஏன்?

0
உலக அதிசயங்கள் என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள், தாஜ் மஹால், ஈபிள் டவர் போன்ற வற்றையா. ஆராய்ச்சி யாளர்கள் இந்த உலகிலேயே மிகவும் அதிசயமானது என்றால் அது உடற்கூறு தான் என்கிறார்கள்.
காரணமின்றி தும்மல், ஏப்பம், விக்கல்



நம் உடற்கூறுகளில் சில செயல்பாடுகள் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது, என இன்றளவும் பதில்களின்றி இருக்கின்றன. 

நமது மூளையில் எப்படி நினைவுகள் சேமிக்கப் படுகின்றன என்பதையே கடந்த வருடம் தான் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதுவும் அதன் செயல் முறை குறித்த அடிப்படை மட்டும் தான், முழுமையாக அல்ல.இந்த வகையில் தூசு இல்லாமல் தும்மல் வருவது, உணவருந்தாமல் ஏப்பம் வருவது, மற்றும் விக்கல் போன்றவை வருவது ஏன் என தெரியுமா?

தும்மல்

தும்மல் என்பது மனிதனின் சுவாசம் சம்மந்தப் பட்டது மட்டு மில்லாமல், இதயம் மற்றும் மூளை பகுதிகளில் தேங்கும் கனமான சூடான காற்றாகும். இது குளிர்ச்சி அடையும் போது அல்லது தூண்டி விடப்படும் போது மிக வேகமாக உந்தப்படும்.
தும்மல்



ஏறத்தாழ நொடிக்கு 152 அடி வேகத்தில் தும்மல் உந்தப்படும் போது வெளியேறுகிறது. 

தும்மல் வருவது என்ன பெரிய விஷயமா என நீங்கள் கருதலாம். ஆனால், திடீரென வரும் தும்மல் காரணமாக மரண மடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏப்பம்

ஏப்பம் என்பது இரைப்பை யிலும், சிறு குடல்களிலும் உற்பத்தியாகும் வாயுவின் தேக்கமே ஆகும். இந்த வாயுவின் வெளிபாடு தான் ஏப்பம். 
சில சமயங்களில் நாம் பேசிக்கொண்டே உண்ணும் போது உணவோடு சேர்த்து காற்றையும் விழுங்கி விடுவோம்.

இதனால் தான் உண்ணும் போது அவசரப் படாமல், பேசாமலும், நன்கு மென்று உண்ண வேண்டும் என கூறுகிறார்கள். இதை தடுக்க குறிப்பிட்டு எந்த வழியும் இல்லை.

விக்கல்
விக்கல்



விக்கல் வருவதற்கு காரணம் ஒருவரது இரத்தத்தில் கரியமில வாயு குறைவாக இருப்பது தான் என உடல் கூறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கரியமில வாயுவை நிறைவு செய்து விட்டால் விக்கல் வருவது நின்று விடும்.
நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் கரியமிலவாயு இருக்கிறது. இதனால் தான், சிறிது நேரம் மூச்சை அடக்கி பிறகு அதை பிளாஸ்டிக் கவரில் வெளிவிட்டு, மீண்டும் அதையே சுவாசித்தால் விக்கல் நின்று விடும் என சிலர் கூறுகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings