போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரதான சாலை ஒன்றில், விதிமீறலில் ஈடுபட்டவர் களிடம் இருந்து போக்குவரத்து காவலர்கள் அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், செல்போனில் பேசிய படியே இருசக்கர வாகனத்தை இயக்கி யுள்ளார். இதனைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள் அப்பெண்ணை வழிமறித்து அபராதத் தொகை கட்டுமாறு அறிவுறுத்தினர்
இதில் அதிர்ச்சி யடைந்த அப்பெண், தனக்கு உடல்நலம் சரியில்லை எனவும் அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் காவலர்களிடம் கெஞ்சி யுள்ளார்.
எனினும் அவர்கள் அபராதம் செலுத்த வற்புறுத்தியதால் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தூக்கி எறிந்து, காவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடத் தொடங்கி யுள்ளார்.
எனினும் அதனை பொருட்படுத்தாத போலீசார், அபராதத் தொகை செலுத்து மாறு அப்பெண்ணிடம் மீண்டும் கூறி யுள்ளனர். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திர மடைந்த பெண், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக காவலர்களிடம் மிரட்டி யுள்ளார்.
இதனை அடுத்து, சிறிதுநேரம் கழித்து அபராதம் எதுவும் வசூலிக்காமல் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments