இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி அப்படி என்ன செய்தார்?

0
உலகம் ஒரு நாடக மேடை என்று முன்னோர்கள் ஒன்றும் சும்மா சொல்ல வில்லை, இதில் நாம் அனைவரும் நடிகர்கள் தான் என்ற வாக்கிய த்தையும் யாரும் மறந்திருக்க முடியாது.



சப்வே ட்ரெயினை தனது மேடையாக நினைத்து செல்ஃபி எடுத்த இளம் பெண்ணைப் பற்றித் தான் டிவிட்டர் முழுக்க பேச்சு. யார் இந்த இளம் பெண்? அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? வாங்க சொல்கிறோம்.

அழகாக போஸ் கொடுத்த பெண்

சப்வே ரயிலில் பயணம் செய்த பென் யஹர் என்ற நபர், ரயிலில் ஒரு இளம் பெண் அனைவரு க்கும் மத்தில் நின்று கொண்டு, 
அவரின் கை-பையைச் சீட்டில் வைத்து அதன் மேல் அவரின் மொபைல் போனை வைத்து அழகாக போஸ் கொடுத்து செல்ஃபி கிளிக் செய்ததை வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

மொபைலில் வீடியோ

இந்த இளம் பெண் சும்மா ஒன்றும் போஸ் கொடுக்க வில்லை, எந்த ஆங்கிளில் அவர் அழகா இருக்கிறார் என்பதைக் கணித்து மகாராணி போல் தொடர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப் படங்களை கிளிக் செய்துள்ளார். 



இந்த முழு நிகழ்வையும் பென் யஹ்ர் தனது மொபைலில் பதிவு செய்து டிவிட்டரில் பதிவிட்டிருக் கிறார்.

8.4 மில்லியன் பேர் பார்த்த வீடியோ

பென் யஹ்ர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவை இதுவரை சுமார் 8.4 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர், சுமார் 2.2 லட்சம் நபர்கள் அதை லைக் செய்துள்ளனர் மற்றும் இந்த பதிவு சுமார் 35,000 முறை ரீ-ட்வீட் செய்யப் பட்டுள்ளது. 
இந்த இளம் பெண்ணை தற்பொழுது அனைவரும் குயீன் (Queen) என்றும் சப்வே பே (Subway Bae) என்றும் போற்றி வருகின்றனர்.

கமெண்டில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது

இந்த இளம் பெண்ணின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை அனைவரும் பாராட்டி யுள்ளனர். 

சுற்றத்தில் உள்ள யாரையும் பற்றி கவலைப் படாமல் அவர் வாழ்க்கைக் கான அந்த நொடியை வாழ்ந்து காட்டி யிருக்கிறார் என்று கமெண்டில் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.



சப்வே குயீனின் உண்மையான பெயர்

டிவிட்டரில் இவருக்கென்று புதிய ரசிகர் பட்டாளமே உருவாகி யுள்ளது. வீடியோவை பார்த்து ரசித்த ரசிகர் ஒருவர் இவரின் அசல் டிவிட்டர் அக்கௌன்ட் மற்றும் அவரின் பெயரைக் கண்டு பிடித்துள்ளார். 
சப்வே குயீனின் உண்மையான பெயர் ஜெசிகா ஜார்ஜ் ஆம். அது மட்டுமின்றி சப்வே ரயிலில் அவர் எடுத்த அசல் புகைப் படத்தையும் தேடிக் கண்டுபிடித்து டிவிட்டரில் பதிவிட்டிருக் கிறார்.

82,000 முறைக்கும் மேல் ரீ-ட்வீட்

வீடியோ வுடன் பதிவிடப்பட்ட ஜெசிகா ஜார்ஜின் புகைப்பட ட்வீட்டும் வைரல் ஆகியுள்ளது. இந்த ட்வீட்டை 3.6 லட்சம் நபர்கள் லைக் செய்துள்ளனர் மற்றும் இதை 82,000 முறைக்கும் மேல் ரீ-ட்வீட் செய்துள்ளனர். 
ரசிகர்களின் கமெண்ட்களை படித்து விட்டு ஜெசிகா ஜார்ஜ் தனது நெஞ்சார்ந்த நன்றியை அனைவரு க்கும் தெரிவித் திருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings