முதியவர்வேடமிட்டு வெளிநாடு தப்ப முயற்சித்த 32 வயது இளைஞர் !

1 minute read
0
திரைப்படத்தில் வருவதை போல, முதியவர் போல் வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர் டெல்லியில் பிடிபட்டுள்ளார்.




டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதியவர் ஒருவரை, அதிகாரிகள் சோதனை யிட்டனர். அப்போது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப் பட்டிருந்த வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் வேறுபாடு இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.
எனவே அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அந்த நபர் 32 வயது இளைஞர் என்பதும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயேஷ் படேல் என்பதும், தெரிய வந்தது. 

அவரை சோதனை செய்த போது அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பவர் இல்லாத கிளாஸாக இருந்துள்ளது. அதோடு உண்மையான உடல் அடை யாளங்களும் பார்ஸ்போர்ட் அடையாளங் களும் வேறுவிதமாக இருந்ததே அவரைக் காட்டிக் கொடுத்துள்ளது.




அதன் பிறகான தீவிர விசாரனையில் அம்ரிக் சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் அம்பலமானது.
முதியவர்போல தோற்றமளிக்க, வெள்ளை நிற டை அடித்து, கனமான மூக்குக் கண்ணாடி அணிந்து வீல் சேரில் விமான நிலையம் வந்துள்ளார்.
ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா? 
இதை யடுத்து ஆள்மாறாட்டம் செந்து வெளிநாடு செல்ல முயன்றதாக படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings