திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கடை செயல்படும் கட்டடத்தின் பின்புறம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த அனைத்து தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல கடையைத் திறந்த ஊழியர்கள், நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்தும், தடயங்களை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை யில் சுமார் 100 கிலோ எடையுள்ள நகைகள் அதாவது ரூ.36 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை யடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளில், கொள்ளையர்கள் இரண்டு பேர் விலங்கு பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு கொள்ளை யடித்திருப்பதும் கையுறை களை அணிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், நகைக் கடையில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பணியில் இருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகத் திட்டமிட்டு, பல நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
Thanks for Your Comments