பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 110 மணி நேரத்திற்கு பின் மீட்பு !

1 minute read
0
4 மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவர் 110 மணி நேரங்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்


கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார். 

இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 72 மணி நேரமாக சுஜித்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. சுஜித் தற்போது ஆழ்துளை கிணற்றில் 88 அடியில் சிக்கி இருக்கிறார்.

பஞ்சாப் சம்பவம்

இதேபோல் ஒரு சம்பவம் பஞ்சாப்பின் சங்கூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த பட்வீர் சிங் என்ற இரண்டு வயது சிறுவன், வீட்டிற்கு பின் புறம் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 
பஞ்சாப் சம்பவம்


முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் போக போக கீழே விழுந்து அதிக ஆழத்தில் சிக்கினான்.

சிறுவன்

105 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் பட்வீர் சிங் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்தான். இதனால் அவனை கயிறு கட்டி இழுக்கவோ ரோபோ வைத்து தூக்கவோ முடியவில்லை. 

இதனால் அவன் விழுந்த குழாய்க்கு அருகிலேயே இன்னொரு சுரங்கம் தோண்டினார்கள். சுமார் 100 அடிக்கு சுரங்கம் தோண்டினார்கள்.

நேரம் ஆனது

இந்த சுரங்கம் தோண்ட முழுதாக மூன்று நாட்கள் ஆனது. அதன்பின் சரியாக 108 மணி நேரம் கழித்து முழுதாக சுரங்கம் தோண்டப்பட்டது. 
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்


அதன்பின் அங்கிருந்து சிறுவனை மீட்க இன்னும் நேரம் ஆனது. கடைசியில் 110 மணி நேரம் கழித்து பட்வீர் சிங் மீட்கப்பட்டான்.

வெறும் 9 இன்ச்

அவனை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வெறும் 9 இன்ச் மற்றும் சுற்றளவு கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் 5 நாட்கள் அந்த சிறுவன் இருந்ததால் 

மூச்சு விட முடியாமல் பலியாகி விட்டதாக மருத்துவர்கள் சிறுவனின் உடலை சோதித்து விட்டு கூறினார்கள். இந்த சம்பவம் பஞ்சாப்பை உலுக்கியது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings