700 வித நகைகள் கொள்ளை - உரிமையாளர் கிரண்குமார் !

0
திருச்சி லலிதா ஜூவல்லரி யில் சுவற்றை துளைப் போட்டு கீழ் தளத்தில் உள்ள தங்கம், டைமண்ட் நகைகளை கொள்ளை யடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 
700 வித நகைகள் கொள்ளை



கொள்ளையர் களை பிடிப்பதற்கு என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் 7 இன்ஸ்பெக்டர் களை கொண்ட 7 தனிப்படை அமைத்து பல்வேறு முனைகளில் கொள்ளையர் களை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் லலிதா ஜூவல்லரி யின் உரிமையாளர் கிரண் குமார் செய்தியாளர் களை சந்தித்து பேசிய போது, 

நகைக் கடையில் இன்று அதிகாலை திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக இடத்துக்கு வந்த திருச்சி மாநகர காவல்துறை விசாரணையில் இறங்கி யுள்ளது. 
லலிதா ஜூவல்லரி
எனக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



இன்று நடைபெற்ற கொள்ளையில் ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்கம் பிளாட்டினம், வைர நகைகள் 700 முதல் 800 எண்ணிக்கை யில் நகைகள் மட்டுமே கொள்ளை யடித்துள்ளனர். 
மேலும் கடையின் தரை தளத்தில் மட்டுமே திருடி யுள்ளார்கள். காவல் துறையினர் கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்த வருகிறார்கள். 
13 கோடி மதிப்புள்ள தங்கம்
இரண்டு கொள்ளையர்கள் மட்டுமே கடை உள்ளே வந்திருக்கி றார்கள். மற்றவர்கள் வெளியியே எத்தனை பேர் என்று தெரிய வில்லை.

நகையை கொள்ளை யடித்தவர்கள் நல்ல தொழில்முறை திருடர்கள், முகமூடி எல்லாம் அணிந்து வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. 

போலீசார் நல்ல ஒத்துழைப்பு வழங்குவ தாகவும், கொள்ளையர் களை விரைவில் பிடித்து களவுபோன நகைகளை விரைவில் மீட்டு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்த கடையில் தரை தளத்தில் மட்டும் 200 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளன. ஆனால் அதில் குறைந்தது 13 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கள் மட்டுமே திருடுபோய் உள்ளது. 
உரிமையாளர் கிரண்குமார்



கண்ணாடி அறையில் வைத்துள்ள நகைகள் எதையும் கொள்ளை யர்கள் தொடவில்லை. அது மட்டுமல்லாமல் துளைப் போட்ட இடம் கடையின் மேலாளர் அறை. 
அந்த அறையில் துளை போட்டால் மட்டுமே தரை தளத்திற்கு வர முடியும் என்பதை இந்த கடையை நன்கு அறிந்தயாரோ தான் திருடிருக்க வாய்ப்பு உள்ளது என்கிற ரீதியில் விசாரணை சென்று கொண்டிருக் கிறது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings