ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு...பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் கடத்தப் படுவதை தடுப்பது குறித்து
டெல்லியில் நடைபெறும் ராணுவ உயர் அதிகாரிகள் மாநாட்டில் ஆலோசிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அப்போது பாதுகாப்பு மற்றும் ராணுவ நிர்வாக விவகாரங்கள் படைகளின் செயல் பாடுகளில் மாறுதல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப் பட்டுகிறது.
ஆலோசனை யின் அடிப்படை யில் முக்கிய கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப் படுகின்றன. டெல்லியில் நேற்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை ராணுவ அதிகாரிகளின் மாநாடு நடைபெறு கிறது.
இதில் ராணுவ நவீன மயமாக்கல், மறு கட்டமைப்பு, புதிய போர் வழிமுறை களை ஒருங்கிணைந்த படை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பாகிஸ்தானில் இருந்து
டிரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் கடத்தப் படுவதை தடுப்பது, காஷ்மீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப் படுவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments