பிறந்த நாளன்று 12 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் !

1 minute read
0
ஐக்கிய அமீரகத்தின் அதுதாபியில் 12 வயதேயான இந்திய வம்சாவளி சிறுமி தனது பிறந்த நாளன்று சுருண்டு விழுந்து இறந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கி யுள்ளது.
பிறந்த நாளன்று சிறுமிக்கு நேர்ந்த துயரம்


இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜி சாக்கோ. இவரது 12 வயது மகளே தனது பிறந்தநாளன்று சுருண்டு விழுந்து இறந்தவர்.

அபுதாபியில் கடந்த 20 ஆண்டுக ளாக குடியிருக்கும் ஷாஜி குடும்பம் சிறுமி மஹிமா சூசன் இறப்பால் அதிர்ச்சியில் உள்ளனர்.

நீண்ட நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சிறுமி மஹிமா, திடீரென்று சுருண்டு விழுந்து இறந்துள்ள தாக கூறப்படு கிறது.

சம்பவத்தை அடுத்து உடனடியாக அவரை மருத்துவ மனையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

தற்போது சிறுமியின் உடலை பதப்படுத்தும் சிகிச்சை முன்னெடுக்கப் பட்டு வருவதாகவும், தொடர்ந்து சடலத்தை இந்தியாவு க்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 26, March 2025
Privacy and cookie settings