வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்... நோர்த் யோர்க் பகுதியில் வாகன மொன்றைச் செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய 13 வயதுச் சிறுவன்
உயிராபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக யோர்க் பிராந்தியப் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
நோர்த் யோர்க்கின், பின்ஞ் அவனியூ (Finch Avenue) தெற்கு மற்றும் டஃப்ஃபெரின் (Dufferin) வீதிப் பகுதியில், இவ் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த சிறுவன் பாரதூரமான காயங்க ளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதா கவும், அவரது காயங்கள் உயிராபத் தானவை என்றே தோன்று வதாகவும் மருத்துவப் பிரிவினர் தெரிவித் துள்ளனர்.
பெற்றோரு க்குத் தெரியாமல் குறித்த சிறுவன், தனது தந்தையின் SUV ரக வாகனத்தை செலுத்தி சென்றதாகவும் பின்ஞ் அவனியூ தெற்கு மற்றும் டஃப்ஃபெரின் வீதிப் பகுதியில்,
எரிபொருள் கொள்கலனு டனான கனரக வாகனத் துடன் மோதி வாகனத்தின் கட்டுப் பாட்டினை இழந்த சிறுவன், அதன் பின்னர் வீதிச் சந்திப்பில் நின்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக் குள்ளாகி யுள்ளார்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், தனது மகனை இரவு தனது வீட்டில் பார்த்த தாகவும், அதன் பின்னர் தான் உறங்கச் சென்று விட்டதாகவும்,
வாகனத்தின் திறப்பு தனது சட்டைப் பையில் இருந்ததா கவும், அதனை அடுத்து தனது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அழைப்பு வந்ததா கவும் விபரம் வெளியிட் டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்துடன் உள்ளூர் பொலிஸாரும் தொடர்பு பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக ஒன்ராறியோ மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments