விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள மூல சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். (வயது 30). உளுந்தூர் பேட்டையில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.
இன்று காலை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் ஸ்டூடியோ நோக்கி சென்று கொண்டி ருந்தார். அப்போது ஒரு கார் வந்தது. இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் கீழே விழுந்தார்.
உடனே காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் மணி கண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் உயிரிழந்தார்.
இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து காரில் ஏறி சென்றது. சிறிது தூரம் சென்றதும் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே காரில் வந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்.
தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் நிறுத்தி சென்ற கார் மற்றும் அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
எனினும் கொலை யாளிகள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக மணி கண்டனை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Thanks for Your Comments