அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவுக்கு வந்த இளம் பெண் ஒருவர், பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழைந்து சிங்கத்தை நோக்கி கையசைத்து, நடன மாடினார்.
அந்த சிங்கமும் இந்த பெண்ணை எதுவும் செய்யாமல் அவரின் அசைவுகளை வேடிக்கை பார்த்தபடி அப்படியே நின்று கொண்டி ருந்தது.
இந்த காட்சிகளை அந்த பெண்ணுடன் வந்திருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார். வீடியோவை அந்த பெண் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அபாயத்தை உணராமல் சிங்கம் இருக்கும் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்த இளம் பெண் மீது பூங்கா நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த அத்துமீறல் குறித்து விசாரணை நடத்தி வரும் நியூயார்க் போலீசார் இப்போது வரை எந்தவித கைது நடவடிக்கை யும் மேற்கொள்ள வில்லை.
Thanks for Your Comments