திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமா நல்லூர் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருபவர் மயில்சாமி.
இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி விட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார்.
இதை யடுத்து காவலரை சிறிது தூரம் துரத்திச் சென்ற பொது மக்கள், அவரை அவினாசி பஸ் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் காவல் துறை அதிகாரியை உடனடியாக அவிநாசி காவல் துறையி னருக்கு தகவலளித்து ஒப்படைத்தனர்.
காவல் அதிகாரியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அவிநாசிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வீடியோ...
Thanks for Your Comments