பழங்குடியின பெண்களுடன் நடனம் ஆடிய ஆளுநர் தமிழிசை !

0
பழங்குடியி னரின் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. 
பழங்குடியினருடன் நடனம் ஆடிய தமிழிசை


அப்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங் களையும் நேரில் சென்று பார்வை யிடுவது,

அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அறிந்து அதனை செயல் படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

மருத்துவ மாணவியாக இருந்த போது தனது தோழிகளுடன் அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியி னரை நேரில் சந்தித்து

அடிப்படை சுகாதார சேவைகளை செய்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

மேலும் முலுகு மாவட்டத்தில் பழங்குடியி னருக்கான பல்கலை.யை ஏற்படுத்த மத்திய அரசுடன் போச்சு வார்த்தை நடத்தப்போவதாகவும் கூறினார்.

பழங்குடியி னரிடம் இருந்து அரிய வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப் படுத்தவும், 


மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்கு விக்கும் விதமாக

நடவடிக்கை எடுக்குமாறு அக்கூட்டத்தில் அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

முன்னதாக, பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த

கோயா மற்றும் லம்பாடா பழங்குடியின சமூகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings