பத்திரிகை யாளர் ஜமாலைக் கொல்ல நான் உத்தரவிட வில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மறுத்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் குறித்து தன் மீதான குற்றச் சாட்டுகளுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக் காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான கூறுகையில், “ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழு பொறுப்பு ஏற்கிறேன்.
ஆனால் ஜமால் கொலையில் என் மீதான குற்றச் சாட்டுகளை நிராகரிக்கிறேன்” என்றார் .
சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் குறித்து கூறும் போது, ”சந்தேகத்து க்கு இடமில்லாமல் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ள உள்ளது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.
சர்வதேச அளவில் கச்சா என்ணெய் விநியோகிக்கும் முட்டாள்கள் தான் அழிப்பார்கள்“ என்று முகமது பின் சல்மான் தெரிவித்தார்.
ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகை யாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியி லிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும்,
அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்ய விருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப் பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது.
ஜமாலை சவுதி தான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமாலின் கொலை பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது.
ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசரு க்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித் திருந்தது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments