உடலில் எந்த பாகத்தில் வலி எடுத்தாலும் ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்தால் மிக எளிதாக நிவாரணம் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே ஐஸ்கட்டிகள் உடல் வலியை நீக்கும் சக்தி வாய்ந்தவை.
அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முட்டி வலி முதுகு வலி என உடலில் எந்த இடத்திலும் இடத்தில் உள்ள வலியும் பறந்து போகும் என்றே சொல்லலாம்.
இதற்கு நமக்கு தேவையானது வேறு ஒன்றுமில்லை.. சாதாரணமாக நம் வீட்டு பிரிட்ஜில் வைக்கப்படும் ஐஸ்கட்டி ஒரு சில துண்டை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஐஸ் கட்டிகளை நம் உடலில் எந்த பகுதியில் வலி இருக்கின்றதோ அந்த பகுதியில் நேரடியாக வைக்காமல்,
ஓர் துணியில் வைத்து வலி இருக்கும் இடத்தில் ஓர் அழுத்தம் கொடுத்து வட்டமாக மசாஜ் கொடுத்தால் வலி குறைந்து விடும்.
வட்டமாக மசாஜ் செய்யும் போது தசைகள் இலகுவாகி மெல்ல மெல்ல வலி குறையத் தொடங்கும். அதே வேளையில் ஒரே இடத்தில் ஐஸ் கட்டியை நீண்ட நேரம் வைக்கக் கூடாது.
ஐந்து நிமிடம் ஒரே இடத்தில் வைத்து வட்ட பாதையில் மசாஜ் கொடுத்தால் போதுமானது. ஒரு சிலருக்கு ஐஸ் கட்டி பயன் படுத்துவது உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
எனவே இதுபோன்ற பிரச்சனையை சந்தித்து வருபவர்கள்.. இதனை மேற் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.
இதே போன்று காயம் ஏற்பட்டு அதனால் ஏற்படக் கூடிய வலி மற்றும் வீக்கத்திற்கு அடிபட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு ஐஸ் கட்டி கொண்டு
இவ்வாறு மசாஜ் செய்தால் வலி குறைந்து விடும் வீக்கமும் குறைந்து விடும் என்பது குறிப்பிடத் தக்கது
Thanks for Your Comments