மெக்சிகோவிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் !

0
உரிய ஆவணங்கள் இன்றி மெக்சிகோவில் தங்கியிருந்த 311 இந்தியர் களை அந்நாடு திருப்பி அனுப்பியதை யடுத்து அவர்கள் இன்று டில்லியில் சோகத்துடன் வந்திறங்கினர்.


அமெரிக்காவு க்குள் சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

அதன்படி அண்டை நாடான 'மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர் களை

அந்நாட்டு தடுக்கா விட்டால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி யாகும் பொருட்களுக்கு கடும் வரி விதிக்கப்படும்' என டிரம்ப் எச்சரித்தார்.

இந்நிலையில், மெக்சிகோவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. 

இதை யடுத்து 311 இந்தியர்களும் இன்று டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார். 

இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் சர்வதேச ஏஜென்ட் களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கி அமெரிக்கா வுக்குள் சட்ட விரோதமாக நுழைய அவர்கள் திட்ட மிட்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.
ரெயிலின் வேகம்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings