மழையில் மின்தடையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் !

0
மழையின் போது ஏற்படும் மின்தடை தொடர்பான புகார் களுக்கு தீர்வு காண 1912 என்ற எண்ணிற்கு பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மழையில் மின்தடையா?


வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

மாழையின் போது மின்தடை குறித்து பொது மக்களின் புகார்கள் குறித்தும், மின் விபத்துகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மின்துறை அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மழையின் போது ஏற்படும் மின்தடை தொடர்பான புகார்களு க்கு தீர்வு காண 1912 என்ற எண்ணிற்கு பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


மேலும்044 - 24959525 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

மழையின் போது மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings