பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக லலிதா ஜுவல்லரி குற்றவாளி கணேசன் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.
அதே நேரம் எந்தவித துன்புறுத்தலும் அளிக்கக் கூடாது என்றும் நீதிபதி சிவகாம சுந்தரி உத்தர விட்டுள்ளார்.
லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த மதுரை வாடிப் பட்டியைச் சேர்ந்த கணேசன்
நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதால், கணேசனை போலீஸ் காவலில் எடுத்து
விசாரிக்க ஸ்ரீரங்கத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகாமி சுந்தரி முன்னிலையில் ஆஜர்ப் படுத்தினர்.
பின்னர் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து, குற்றவாளிி கணேசனை விசாரிக்க, நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி சிவகாமி சுந்தரி அனுமதி வழங்கினார்.
அதே நேரம் எந்தவித துன்புறுத்தலும் அளிக்கக் கூடாது என்றும் நீதிபதி சிவகாம சுந்தரி உத்தர விட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட போது கீழே சிதறி கிடந்த 1 லட்சத்து 74 ஆயிரம் பணம், 53 சவரன் தங்க நகை களை
அதன் உரிமை யாளர்கள் சூரியாஜமால், உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
Thanks for Your Comments