தீபாவளி வசூல் எவ்வளவு தெரியுமா?

0
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங் களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். 
தீபாவளி வசூல்


இந்தச் சோதனையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங் களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 19.80 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது.

உண்மை யிலேயே, இது மட்டும் தான் லஞ்சத் தொகையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போது, மாநிலத்தில் உள்ள

அரசு அலுவலகங் களில் பணியாற்றும் கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை தீபாவளி இனாம் என்ற பெயரில் அன்பளிப்பு பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இதன்படி, முக்கியத் துறைகளான தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 

ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் என பணப் புழக்கம் அதிகம் உள்ள அலுவலகங்களில் தொடர்புடைய ஒப்பந்தக் காரர்கள், ஏஜென்டுகள் எனப் பலரும் தீபாவளி இனாம் வழங்கி வருகின்றனர்.


இதில் பணமாக மட்டு மல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள், வெடிகள்,

ஆடைகள் எனப் பல வகையிலும் தீபாவளி இனாம் என்ற பெயரில் லஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அளிக்கப்படும் இனாம் மூலம் ஒப்பந்தக் காரர்கள், ஏஜென்டுகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் அதிகாரிக ளிடம் சலுகை பெறுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இதைக் கட்டுப் படுத்த, ஆண்டு தோறும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீபாவளிப் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பாக திடீர் சோனைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆண்டு, கடந்த 23, 24 என இரு நாள்களில், அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகம், உயர் நீதிமன்ற வளாக மாவட்ட தீ அணைப்பு அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், 

கீழக்கரை நகராட்சி அலுவலகம், மதுரை டாஸ்மாக் கடை, உத்தம பாளையம் வாகன ஆய்வாளர் அலுவலகம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவெரும்பூர் சார் பதிவாளர் அலுவலகம், 

உத்தம பாளையம் தரக்கட்டுப் பாட்டு அலுவலகம் உள்ளிட்ட, மாநிலம் முழுவதும் உள்ள 17 இடங்களில் திடீர் சோதனை நடத்தப் பட்டது.

இந்தச் சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத 19 லட்சத்து 80 ஆயிரத்து 105 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது. 


இதில் அதிக பட்சமாக, சென்னை அம்பத்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 4,67,300 ரூபாயும்,

தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2,24, 080 ரூபாயும், திருவெரும்பூம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1.67 லட்சமும், 

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட தீ அணைப்பு அலுவலகத்தில் 1.60 லட்சமும்,

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் 1,45,440 ரூபாயும், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1,05,950 ரூபாயும் சிக்கியது.

மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான அரசு அலுவலகங் களில், வெறும் 17 இடங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடத்தி, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கைப்பற்றி யிருப்பது என்பது பெயரளவிற்கு நடத்தப்பட்ட ஒன்றாகவே பொது மக்கள் கருதுகின்றனர். 

வரும் காலங்களி லாவது இது போன்ற விழாக் காலங்களில் விரிவான சோதனைகள் மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings