ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பகல்லா கிராமத்தை சேர்ந்தவர், சிமானச் மாலிக். (55) நேற்று வீட்டின் அருகில் உள்ள காட்டில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற இவர்,
அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. இதனை யடுத்து உறவினர்கள் அவரை தேடி அலைந்த போது, அவர் காட்டுப் பகுதியில் விழுந்து கிடந்துள்ளார்.
மேலும் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால், இறந்து விட்டதாக கருதிய உறவினர்கள், உடல் தகனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
உடலை தகனம் செய்யும் இடத்திற்கு அவரை தூக்கிச் சென்றனர். அப்போது திடீரென மாலிக் தனது தலையை அங்கும் இங்கும் அசைத்துள்ளார்.
இதை பார்த்த சிலர் பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். சிலர் அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததும், ஆரோக்கி யத்துடன் எழுந்து உட்கார்ந் துள்ளார். சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டி பிழைத்துள்ளார்.
மேலும் ''கடுமையான காய்ச்சல் காரணமாக உடல் சோர்ந்து மயங்கி விழுந்துள்ளார்.
சரியான சிகிச்சை அளித்த பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. சிகிச்சை பெற்ற பின்னர், அவர் டிஸ்சார்ஜ் ஆனார்'' என்று சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments