அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை என்ற நிலையில் ஏவுகணை சோதனை !

0
அமெரிக்கா வுடன் பேச்சு வார்த்தையை உறுதி செய்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி யுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை என்ற நிலையில் ஏவுகணை சோதனை !
அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா - வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ள தாக வடகொரியா தெரிவித்தது.

இதற்கு அமெரிக்கா தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப் பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்த நிலையில் மீண்டும் ஏவுகணையை சோதனை அந்நாடு நடத்தி யுள்ளது. 

இந்த ஏவுகணை சோதனை வடகொரியா வின் கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை வெற்றிகர மாக நடத்தப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த சோதனை குறித்து வடகொரியா கூறும் போது, “புக்குக்சாங் -3 ஏவுகணை சோதனை அயல்நாட்டு சக்திகளின் அச்சுறுத் தலைக் கட்டுப் படுத்துவதில் வடகொரியா வுக்கு புதிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை காரணமாக அண்டை நாடுகளின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனை களை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப் பட்டன. 

வடகொரியா வின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்பு களைச் சற்றும் பொருட்படுத் தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. 
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியா வின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன.
கடந்த பிப்ரவரியில், வியட்நாமிய தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருக் கிடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின் போது அமெரிக்கா வுக்கும் வடகொரியா வுக்கும் இடையே 

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தோல்வி யடைந்தன. இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings