முதுகு வலி அதிலும் குறிப்பாக கீழ் பக்க முதுகு வலி. தலைவலி. கழுத்துவலி போன்ற வலிகளை எதிர் கொள்ளாதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் இதற்கு நிரந்தர நிவாரணத்தை தேடிக் கொண்டே இருப்பார்கள்.
தற்போது அறிமுகமாகி யிருக்கும் Muscle Manipulation Techniques அதாவது தசைகளை தளர்வாக்க கையாளும் புதிய தொழில் நுட்பம் என்ற நவீன சிகிச்சையால் இந்த வலிகளை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் வைத்தியர்கள்.
பொதுவாக எம்மில் பலரும் உடல் எடையை குறைப்பதற் காக உடற்பயிற்சி கூடங்களு க்கும், உணவுக் கட்டுப் பாட்டுக்கும், யோகா பயிற்சிகளும் செய்வதையும் வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
ஆனால் இந்த உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றை தொடர்ந்து கடை பிடிக்காமல், ஒரு ஆறு மாதம் கழித்தோ... ஓராண்டு கழித்தோ..
அவர்கள் எதிர் பார்க்கும் அளவிற்கு உடல் எடை குறைந்தவுடன் இதனை கைவிட்டு விடுவார்கள். இதன் காரணமாக மீண்டும் அவர்களுக்கு உடல் எடை கூடுவதுடன் கழுத்து வலி, தலை வலி முதுகு வலியும் வந்து விடுகிறது.
இதற்கு தற்போது Muscle Manipulation Techniques என்ற புதிய சிகிச்சை அறிமுகமாகி யிருக்கிறது. இந்த சிகிச்சை நரம்பியல் மருத்துவத்தில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு,
இயன் முறை வைத்தியர்கள் வழங்கும் ஒரு வகையினதான பயிற்சி. இத்துடன் சில பிரத்யேக தசை தளர்வு சிகிச்சை களையும் இணைத்து தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.
இத்தகைய சிகிச்சையை Chiropractors, Osteopathic Doctors, Physical Therapists என மூன்று வகையில் வைத்தியர்கள் சிகிச்சை யினை வழங்குவதில் பிரத்தியேக பயிற்சியை பெற்றிருக்கி றார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரின் தலைவலி, கழுத்துவலி, கீழ்ப்பக்க முதுகு வலியின் தன்மையை பொருத்து கைகளாலோ அல்லது சிறிய கருவிகளாலோ தங்களது சிகிச்சை களை தசைகளின் மீது பிரயோக படுத்துகிறார்கள்.
இன்னும் நுட்பமாக விவரிக்க வேண்டு மென்றால் எம்முடைய தசை பகுதிகளை தளர்வுறச் செய்து, அதனை இயல்பான நிலையில் இயங்கச் செய்கிறார்கள்.
இதன் மூலம் வலி குறைகிறது. இதன் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகிய வற்றை பின்பற்றினால் தலைவலி, கழுத்து வலி, கீழ்ப்பக்க முதுகு வழி ஆகியவை முழுமையாக குணமடையும்.
Thanks for Your Comments