குழந்தையை மீட்க குழிதோண்ட நவீன இயந்திரம் வந்தது !

0
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ரிக் எனப்படும் நவீன இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நவீன இயந்திரம் வந்தது


மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப் பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கிய தாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், 

பராமரிப் பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர் பாராத விதமாக தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இதை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, 

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில் குமார், எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர், தீயணைப்பு 

மற்றும் மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர்கள் ப்ரியா ரவிச்சந்திரன், சரவண குமார் ஆகியோர் நிகழ்விடத் துக்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப் படுத்தி, கண்காணித்து ஆலோசனைகள் வழங்கினர்.


முதல் கட்டமாக 27 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்கும் வகையில், மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 

தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த

தனியார் மீட்புக் குழுவினரின் முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வி யடைந்தது. 

இதனிடையே சனிக்கிழமை அதிகாலை 70 அடி அளவுக்கும் கீழே குழந்தை சுஜித் போய் விட்ட நிலையில், தொடர்ந்து மீட்புக் குழுவினர் நம்பிக்கை யுடன் பணிகளை தொடர்ந்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கரூர் எம்.பி எஸ்.ஜோதிமணி ஆகியோரும் மீட்புப் பணிகள் நடைபெற்ற பகுதிக்கு வந்து, பணிகள் குறித்து கேட்டறிந்தனர். 
சனிக்கிழமை பிற்பகல் வரை மீட்புப் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உபகரணங் களுடன் நிகழ் விடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 


இருப்பினும் மாலை வரை மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் லேசான மழை பெய்ததால் மீட்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 

இதற்கிடையே 70 அடியில் சிக்கியிருந்த குழந்தை மண்சரிவு காரணமாக மேலும் சில அடி கீழே இறங்கியதாக கூறுப்படு கிறது.

இதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறு அருகே மூன்றரை மீட்டர் பக்க வாட்டில் ரிக் இயந்திரம் மூலம், குழிதோண்டி, அதன் வழியாக தீயணைப்பு வீரரை அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப் பட்டது. 

இதற்காக ரிக் இயந்திரம் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணிக்கு சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings