அதிகாரிகளின் அலட்சியம்... உயிரை கையில் பிடித்து ஓடிய பயணிகள் !

0
ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டிய பயணிகள் ரயில் வந்து விட்டது என்ற பதற்றத்தால் ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மேலாகச் செல்லாமல் ஓட்டமும் நடையுமாக தண்ட வாளத்தைக் கடந்து சென்றார்கள்.
அதிகாரிகளின் அலட்சியம்... உயிரை கையில் பிடித்து ஓடிய பயணிகள் !
அதே நேரத்தில் காகஜ்நகர் செல்லும் ரயில் நகரத் தொடங்கியதால் தண்ட வாளத்தைக் கடந்து கொண்டிருந்த பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

ரயில்வே அதிகாரிகள் செய்த சிறிய தவறால் பல பயணிகளின் உயிர் அபாயத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

திங்களன்று மாலை 3.50 மணிக்கு பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயில் வரவேண்டி இருந்தது. 

ஆனால் அதே நேரத்தில் பலக்னாமா ரயில் நான்காவது பிளாட் பாரத்தில் வந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.
அதனால் ஹௌரா பலக்னாமா எக்பிரஸ் ரயிலில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் வந்து விட்டது என்ற பதற்றதால் 

ஃபுட்ஓவர் பிரிட்ஜில் ஏறாமல் ஓட்டமும் நடையுமாக நேராக தண்ட வாளத்தில் இறங்கி கடந்து செல்ல முயன்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் நோக்கிச் செல்லும் பாக்கியநகர் ரயில் நகரத் தொடங்கியதால் தண்ட வாளத்தை கடந்து கொண்டிருந்த பயணிகளின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இறுதியில் வந்தது எம்எம்டிஎஸ் தான் என்று அறிந்துகொண்ட பயணிகள் மீண்டும் ஒன்றம் நம்பர் பிளாட் பாரத்திற்குத் திரும்பினார்கள். 
பாக்கியநகர் எக்ஸ்பிரஸின் இஞ்சின் முன்பாகவே சிலர் கடந்து சென்றதும். 
அதே நேரத்தில் சிலர் தண்ட வாளத்தை தாண்டிக் கொண்டு இருந்ததும். சற்று நேரம் பதற்றமான சூழ்நிலையை அங்கு உருவாக்கியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings