பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகள் சுகாதார மற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளி யிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நாள் தோறும் கடைகளில் வாங்கப்படும் பால் பாக்கெட்டுகள் மற்றும் அதன் தரம் குறித்து இந்திய அளவில் மாபெரும் ஆராய்ச்சியை மேற்கொண் டுள்ளது
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி யளிப்பவை யாக உள்ளன.
நாடெங்கிலும் உள்ள தனியார் பால் பாக்கெடுகள் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் மூல பாலின் அளவை விட பூச்சிக் கொல்லிகளும், அப்லாடாக்சின் என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ள தாக தெரிய வந்துள்ளது.
சுமார் 3825 பால் மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் அதில் 47 சதவீதம் மட்டுமே ஆரோக்கிய மான பால் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் அசுத்தமான பால் விற்பனை யாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் உள்ளன.
பாலில் இதுபோல அசுத்தங் களும், கலப்படங் களும் அதிகமாகமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக தர நிர்ணய ஆணையர் பவன் அகர்வால் தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments