பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக் கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப் பட்டது.
ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
ரஃபேல் விமானத்தின் செயல் பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.
இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்… என்று அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப் படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
டஸால்ட் ஏவியேசன் நிறுவனத் திடம் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க 2016 இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.
ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூ வைத்து 'சஸ்த்ர பூஜை செய்தார். பின் ரபேலில் ஏறிப் பறந்தார்.
இந்திய விமானப் படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பெற்றுக் கொண்டார்.
ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று ஹிந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, இந்தியாவின் முதல் ரபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பறந்தார்.
பின் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறிய போது. நான் சூப்பர்சோனிக் விமானத்தில் பறப்பேன் என நினைத்த தில்லை. விமானத்தில் பயணிப்பது வசதியாகவும், மென்மையாகவும் இருந்தது. . என்றார்.
முன்னதாக, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த ராஜ்நாத் பின்னர், ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் தொழிற் சாலைக்கு சென்றார். அவரை டசால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியர் வரவேற்றார்.
தொடர்ந்து ராஜ்நாத் சிங் தொழிற் சாலையை பார்வை யிட்டார். இந்த நிகழ்ச்சியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர், இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள், பிரான்ஸ் உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
Ready for take off in the newly inducted Rafale pic.twitter.com/iNcsx3KUdO— Rajnath Singh (@rajnathsingh) October 8, 2019
இந்த விமானத்திற்கு 'RB001 ' என விமானப்படை தளபதி பெயர் சூட்டியுள்ளார். பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்ட முதல் #ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங். வரலாற்றில் முக்கியமான நாள் இது. இந்தியா - பிரான்ஸ் உறவு சிறப்பானது. இந்த உறவு இன்னும் வலுப்பெறும். குறிப்பிட்ட காலத்தில் ரபேல் விமானங்கள் தயாரிக்கப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரபேலில் பறப்பது பெருமை அளிக்கிறது. இந்த விமானங்கள், இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும். வான்வெளி யில் இந்தியாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும். பிரான்ஸ் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. என்றார்.
முதல்கட்டமாக 4 போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியா வர உள்ளன. இந்த விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாம் .
Thanks for Your Comments