வயிற்றுக் கோளாறுகளில் தொடங்கி, சருமப் பிரச்னை வரை பலதுக்கும் வயிற்றில் பூச்சி இருப்பதும் ஒரு காரணமாகலாம் என்கிறார்களே...
பூச்சி மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொல்வதன் காரணம் என்ன? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்? வயது வரம்பு உண்டா?
பொது மருத்துவர் அருணாச்சலம்
குழந்தைகளின் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம் இந்தப் பூச்சிகள் தான். குழந்தைகள் பெரும்பாலும் மணலில் விளையாடு வார்கள்.
பிறகு கைகளைக் கழுவ மாட்டார்கள். பூச்சிகளின் முட்டைகள், குழந்தைகளின் நக இடுக்குகளில் புகுந்து கொண்டு, அதன் மூலம் வாய்க்குச் செல்வதும் அதிகமாக நடக்கும்.
காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களைக் கழுவாமல் அப்படியே சாப்பிடுவதன் மூலமும் வயிற்றில் பூச்சிகள் வரலாம்.
ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளின் வழியேவும் பூச்சிகள் வயிற்றுக்குள் போகலாம். வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப் போருக்கும் இது சகஜம்.
படுக்கையில் இருக்கும் முதியவர்களை சுத்தப் படுத்தும் வேலையைச் செய்கிறவர்கள், விவசாயிகள், மணல் வேலை செய்பவர்கள் போன்றோரும் சுலபமாக இந்தப் பூச்சித் தொற்று க்கு ஆளாகிறார்கள்.
தண்ணீரி லிருந்து சருமத்தைப் பாதிக்கிற பூச்சிகளும் உண்டு. வயிற்று உபாதைகள் மட்டுமின்றி, இந்தப் பூச்சிகள், வீசிங் எனப்படுகிற மூச்சுத் திணறல் பிரச்னையையும் அர்ட்டிகேரியா எனப்படுகிற ஒருவித சரும அலர்ஜியையும் கூட ஏற்படுத்தலாம்.
2 வயதுக்கு மேல்தான் பூச்சி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் 6 மாத இடைவெளி அவசியம். அடிக்கடி பூச்சி மருந்து கொடுப்பது ஆபத்தானது. சுத்தமும் சுகாதாரமும் கடைப் பிடிக்கப்பட வேண்டும்.
வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் - அபூர்வ நிகழ்வு !
முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !
குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை !
தினசரி 2 வேளைகள் முறையாகக் குளிப்பது, நகங்களை வெட்டுவது, கழிவறை சென்று வந்ததும் கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்ததும் கை, கால்களைக் கழுவுவது போன்றவை மிக முக்கியம். சுத்தமான முறையில் சமைக்கப் பட்ட உணவுகளும் அவசியம்.
பூச்சி மருந்து என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
சம்பந்தப் பட்டவரின் வயது, எடை, மருத்துவப் பின்னணி தெரிந்து சரியான மருந்தை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
Interview Questions
Thanks for Your Comments